செ.ஹரிஷ்
திரைப்படங்களில் முன்னணி நடிகர்களின் பஞ்ச் வசனங்கள் இன்றும் ரசிகர்களின் மத்தியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் விஜயின் பஞ்ச் வசனங்களும் அடங்கும்..!
பிரச்சன இல்லாத மனுஷனும் இல்ல.. பிரச்சனையே இல்லாதவன் மனுசனே இல்ல..
சாவு நெனச்சா வரும், ஆனா சாதனை ஜெயிச்சா தா வரும்..!
வாழ்க்கைங்கிறது ஜெயிக்கிறதுக்கும் தோக்குறதுக்கும் இல்ல வாழ்றதுக்கு..!
எதுக்குடா உன்னை நீயே குறைச்சு மதிப்பிட்டுகிற... பர்சனாலிட்டி உடம்புல இல்ல, மனசுல தா இருக்கு, தன்னம்பிக்கைய மட்டும் இழந்துடாத. அதுதான் உண்மையான பர்சனாலிட்டி... நம்பிக்கை இருந்தா உன்னோட கோல் ஜெயிக்கும்.
நாம செம்மையா வாழ்ந்து காட்டுறதுதான்.. நாம வாழவே கூடாதுனு நினைக்கிறவங்களுக்கு நாம கொடுக்குற பெரிய தண்டனை.
நம்ம யாருங்கிறது முக்கியம் இல்ல, நம்மளால என்ன முடியுங்கறது தான் முக்கியம்.
திறமைக்கும், தன்னம்பிக்கைக்கும் மொகம் ஒரு தடையில்ல.. திரும்பி எழுந்து வா!
நாம என்னைக்குமே ஜெயிக்கிறதுக்காக விளையாடனும், அடுத்தவன தோக்கடிக்கறதுக்காக விளையாட கூடாது.
நண்பா வெற்றி நம்ம கண்ண மறைக்கும், தோல்விதான் கத்துக் கொடுக்கும்.
மத்தவங்கள வேதனைப்படுத்தாத எந்த சந்தோஷமும் தப்பு இல்ல, ஆனா மத்தவங்கள வேதனைப்படுத்துற ஒரு சின்ன ஸ்மைல் கூட தப்புதான்..!
உண்மையா ஒருத்தவங்கள எனக்கு நேசிக்க தெரியும், ஆனா பொய்யா வெறுக்க தெரியாது.
ஆண்டவன் கொடுக்கிறது யாராலும் தடுக்க முடியாது, அதே மாதிரி ஆண்டவன் தடுக்கிறத யாராலையும் கொடுக்க முடியாது.
ஒரு ஆணோட வெற்றிக்கு பின்னாடி ஒரு பொண்ணு இருக்கும், அதே மாதிரி ஒரு பெண்ணோட வெற்றிக்கு பின்னாடி ஒரு ஆண் இருப்பான், அதுலயும் கல்யாணம் ஆன பொண்ணுக்கு பின்னாடி கண்டிப்பா கணவன் இருப்பான்..!