சேலம் சுபா
டென்ஷன் எனப்படும் மன அழுத்தத்தை கடந்து வர நிறைய வாழ்க்கை முறைகளை மனவியல் வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். என்ன செய்தால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். இதோ உங்களுக்காக சில எளிய டிப்ஸ்:
மூக்கு வழியாக மெதுவாகவும், வாய் வழியாகவும் மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றும் ஆழமான சுவாசத்தை கடைபிடியுங்கள்.
மைண்ட்ஃபுல்னெஸ் தியானம் எனப்படும் கடந்த நினைவுகளை விடுத்து
தற்போதைய தருணத்தில் கவனம் செலுத்துங்கள்.
கலங்கிய மனதைத் தெளிவுபடுத்த அந்த இடத்தை விட்டு நகர்ந்து வெளியே ஒரு சிறிய நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
உற்சாகம் தரும் எண்டோர்பின்களை வெளியிட யோகா அல்லது ஜாகிங் போன்ற வழக்கமான உடல் பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.
மன அழுத்த ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் ஒவ்வொரு இரவும் 7-8 மணிநேர ஆரோக்கியமான தூக்கத்தை பழக்கமாக்குங்கள்.
சமச்சீர் உணவு முறையில் முழு உணவுகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த சத்தான உணவை உண்ணுங்கள். காரமான பாஸ்ட்புட் உணவுகளை தவிருங்கள்.
மகிழ்வான மனநிலை தரும் நீங்கள் விரும்பும் அமைதியான, நிதானமான காட்சிகளை கற்பனை செய்து பாருங்கள்.
மன அழுத்தம் தரும் எண்ணங்களையும் உணர்வுகளையும் ஒரு காகிதத்தில் எழுதிக் கிழியுங்கள்.
உங்கள் நம்பிக்கைக்குரிய குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் ஒருவருடன் உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்களை போன்றே மன அழுத்தங்களை அனுபவிக்கும் மற்றவர்களுடன் இணைந்து கருத்துகளைப் பகிருங்கள்.
டென்ஷன் தரும் அத்தியாவசியப் பணிகளில் கவனம் செலுத்தி அவற்றை நிர்வகிக்கக்கூடிய பகுதிகளாகப் பிரித்து நேர மேலாண்மையை செயல் படுத்துங்கள்.
தேவையற்ற செயல்களுக்கு 'வேண்டாம்' 'இல்லை' 'நோ' என மறுக்கும் உறுதியுடன் இருங்கள்.
அலுப்பு தரும் அன்றாட அலுவல்களில் இருந்து அவ்வப்போது விலகி விடுப்பு எடுத்து பயணம் அல்லது நீங்கள் விரும்பும் செயல்களில் ஈடுபட்டு மனதை ரீசார்ஜ் செய்யுங்கள்.
மனதை நோகடிக்கும் எதிர்மறை மனிதர்களிடமிருந்து விலகி இருங்கள். அவசியமில்லாத பேச்சுகளை உறுதியாக புறக்கணியுங்கள்.
அவசியம் ஏற்பட்டால் தயங்காமல் உங்கள் மனதுக்கு எனர்ஜி தரும் வழிமுறைகளை பரிந்துரை செய்து வழிகாட்ட நல்ல மனவியல் நிபுணர் உதவியைப் பெறுங்கள்.