பாரதி
தன்னுடைய திரையுலகப் பயணத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கும் (இருந்த என்று சொல்வதற்கு மனமில்லை) இவர், சமீபத்தில் 'இது என்னுடைய கடைசி படம்' என்ற அறிவிப்பின் வாயிலாக, தன்னுடைய அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார்.
விஜய்யின் அரசியல் என்ட்ரியின் பின்னணி பார்ப்போம்:
ஜூன் 22, 1974-ம் ஆண்டு பிறந்த விஜய், 1984ம் ஆண்டு திரைப்படத்துறையில் அறிமுகமானார். பின்னர் சில வருடங்களிலேயே மக்களின் தளபதியாக மாறினார். சினிமாத்துறையில் வெற்றியடைந்த விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியையும் தொடங்கி அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
2009 ஆம் ஆண்டு விஜய் தனது ரசிகர்/நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார்.
இவ்வமைப்பு 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது. அதே ஆண்டு விஜய் India Against Corruption இயக்கத்திற்கு ஆதரவளித்தார்.
2017 ஆண்டு மெர்சல் படத்தின் மூலம் GST வரி விபரங்கள் குறித்தும் அவற்றில் பிழைகள் உள்ளன என்பதை சுட்டிக் காட்டும் வகையிலும் அப்படத்தின் காட்சிகள் அமைய, விஜய் அரசியல் வட்டாரங்களில் மிகவும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.
2017ல் நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்களையும் ஆதரித்தார். 2018ல் நடந்த தூத்துக்குடி சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்தார். இவையனைத்தும் விஜயின் அரசியல் என்ட்ரிக்கான ஆயத்தப் பணிகள் என்று அன்றே பேசப்பட்டது.
02.02.2024 அன்று தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்தார் விஜய். தனது கட்சியின் பெயரில் திராவிடம் என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.
முன்னதாக, 25/01/2024 அன்று சென்னையில் நடைபெற்ற கட்சியின் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமைச் செயலக நிர்வாகிகள் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விஜய் வெளியிட்ட தனது முதல் அறிக்கையில், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனும் திருக்குறளைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக கட்சியில் ஒரு மணி நேரத்தில் 2 மில்லியன் பேர் உறுப்பினர் கார்டு பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
வரவிருக்கும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.
தளபதி விஜய் அடுத்த 2 ஆண்டுகளில் அதற்கான அடித்தளம் அமைக்கும் பணிகளில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின், கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள்,கொடி, சின்னம் மற்றும் செயல் திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், அரசியல் பயணம் துவங்கும் எனவும் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் கள்ளக்குறிச்சி விஷக் கள்ளச்சாராயம் சம்பவத்தை முன்னிட்டு, விஜய் மிகக்கோபமாக கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்தார். விஷக் கள்ளச்சாராயம் குடித்து உயிருக்குப் போராடியவர்களை மருத்துவமனைக்குச் சென்று நேரில் விசாரித்தார்.
The Goat படத்தையடுத்து ஒரு படம் மட்டுமே நடித்துவிட்டு முழு நேரப் பணியாக அரசியலில் ஈடுப்படப்போவதாக அறிவித்த விஜய், தற்போது படத்துடன் சினிமா பயணத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
பல வருடங்களாக சினிமாவில் வெற்றிப் பாதையில் பயணித்த விஜய், பொறுமை மற்றும் திட்டமிடுதலை இரு கரங்களாகப் பயன்படுத்தி அரசியலில் முன்னேறி வருகிறார்.
திரை உலக தளபதி, அரசியல் களத்திலும் தளபதியாக இருந்து மக்களை வழி நடத்திச் செல்வார் என்று நம்புவோம்!
Happy Birthday தளபதி! All The Best!