தனக்குத்தானே இரங்கற்பா எழுதிக் கொண்ட ஒரே கவிஞர்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

காலத்தை வென்ற புகழ்பெற்ற தமிழ் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தமிழ் திரைப்படங்களுக்காக சுமார் 5,000க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். 4000கும் மேற்பட்ட கவிதைகள், கட்டுரைகள் என பல எழுதியவர். 

Kannadasan

காரைக்குடிக்கு அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆச்சி தம்பதியருக்கு ஜுன் 24, 1927 ஆம் ஆண்டு எட்டாவது மகனாகப் பிறந்தவர்.

Kannadasan

ஆறு திரைப்படங்களை தயாரித்தவர். நிறைய படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக வலம் வந்தவர். சாகித்ய அகாடமி விருது 1980 இல் பெற்றவர்.

Kannadasan

1968 ஆம் ஆண்டில் வெளியான 'குழந்தைக்காக' என்ற படத்தில் தேவன் வந்தான் என்ற பாடலை இயற்றியதற்காக (தென் இந்தியாவிலேயே) பாடலாசிரியருக்கான முதல் தேசிய விருதை பெற்றவர் கண்ணதாசன் அவர்கள்.

Kannadasan

எட்டே நாட்களில் ஏறத்தாழ 96 மணி நேரத்தில் குற்றாலத்தில் 'இயேசு காவியம்' என்ற காவியத்தையே இயற்றி முடித்து ஒரு அசாத்திய சாதனையை நிகழ்த்தியவர்.

Kannadasan

'அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே' கண்ணதாசனின் இந்தப் பாடல், சங்க காலத்து பாடல் ஒன்றிலிருந்து சில வரிகளை எடுத்து திரை இசையில் கலக்கிய பாடல்.

Kannadasan

இலக்கிய தரம் வாய்ந்த சிலேடையில் அமைந்துள்ள சுவையான பாடல் இது. சிலேடை என்பது நேரடியாக ஒரு பொருளும் மறைமுகமாக மற்றொரு பொருளும் தரும். இந்தப் பாடல் அந்த வகையைச் சார்ந்தது.

Kannadasan

இந்த 'அத்திக்காய் காய் காய் காய்' பாடல் 1962ல் பலே பாண்டியா திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள் இசையில் வந்த பாடல். ஒவ்வொரு வரியிலும் காய் என்ற சொல் வேறு வேறு அர்த்தத்தில் வரும் அருமையான பாடல்.

Viswnathan Ramamoorthy

மூன்றாம் பிறை திரைப்படத்தில் 'கண்ணே கலைமானே' என்பது இவரது கடைசி பாடலாகும். 1981 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.

Kannadasan

கண்ணதாசன் அவர்களின் ஒவ்வொரு திரைப்படப் பாடலும் இலக்கியச்சுவையில் மயங்கத்தக்க வகையில் அதே சமயம் எளிய வரிகளைக் கொண்டு இயற்றப்பட்டவை. அவருடைய பாடல்கள் எதையும் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

Kannadasan

தனக்குத்தானே இரங்கற்பா எழுதிக் கொண்ட ஒரே கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மட்டுமே. இவர் இறப்பதற்கு சில ஆண்டுகள் முன்பே இந்த இரங்கற்பாவை எழுதிவிட்டார்!

Kannadasan
Home tips
தீப்பெட்டி ஈரமாகி போச்சா? - பயனுள்ள வீட்டு குறிப்புகள் இதோ !