கமல்ஹாசனுடன் திரையைப் பகிர்ந்து கொண்ட டாப் 10 நடிகைகள்!

ஸ்ரீநிவாஸ் கே

கமல்ஹாசனும் ஸ்ரீதேவியும் தமிழ்த் திரையுலகைக் கலக்கிய மிகச்சிறந்த திரை ஜோடி. இவர்கள் இருவரும் இணைந்து 27 படங்கள் நடித்துள்ளனர்.

kamal haasan and sridevi

ஸ்ரீப்ரியா, 1974 ஆம் ஆண்டு வெளிவந்த ’அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் முதன்முறை கமல்ஹாசனுடன் நடித்தார். ஸ்ரீப்ரியா கமல்ஹாசனுடன் இனைந்து 24 படங்களில் நடித்துள்ளார்.

kamal haasan and Sripriya

தெலுங்கு திரையுலகின் சிறந்த நடிகையான ஜெயபிரதா, கமல்ஹாசனுக்கு ஜோடியாக 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

kamal haasan and jayaprada

'தேவர் மகன்' படத்தில் கமல்ஹாசனின் மனைவியாக நடித்த ரேவதி கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தார். இதுதவிர புன்னகை மன்னன், ஒரு கைதியின் டைரி, மகளிர் மட்டும் போன்ற படங்களிலும் கமல்ஹாசனுடன் நடித்துள்ளார்.

kamal haasan and revathi

கமல்ஹாசனும், ஊர்வசியும் தமிழில் ஐந்து படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்கள். அந்த ஒரு நிமிடம், மைக்கேல் மதன காமராஜன், மன்மதன் அம்பு மற்றும் உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்துள்ளனர்.

kamal haasan and urvashi

நடிகர் கமல்ஹாசனின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் முக்கியப் பங்காற்றியவர் நடிகை கௌதமி. இவர்கள்  தேவர் மகன் மற்றும் குருதிப்புனல் படங்களில் இணைந்து நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனின் மனைவியாக ‘பாபநாசம்’ படத்தில் நடித்தார் கௌதமி .

kamal haasan and gowthami

அம்பிகா, காக்கி சட்டை (1985) மூலம் புகழ் பெற்றார்.  அம்பிகா கமல்ஹாசனுடன் இணைந்து மொத்தம் 9 படங்களில் நடித்துள்ளார்.

kamal haasan and ambika

சிம்ரன்-கமல்ஹாசன் நடித்த பம்மல் கே.சம்பந்தம் தமிழில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களில் ஒன்றாகும். இது தவிர அவருடன் பார்த்தாலே பரவசம், பஞ்சதந்திரம் போன்ற படங்களிலும் சிம்ரன் நடித்துள்ளார்.

kamal haasan and simran

கமல்ஹாசனுடன் இரண்டு படங்களில் நடிகை ஜோதிகா நடித்துள்ளார். தெனாலி மற்றும் வேட்டையாடு விளையாடு ஆகிய படங்களில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார்.

kamal haasan and jyothika

நடிகை த்ரிஷா நடிகர் கமல்ஹாசனுடன் மன்மதன் அம்பு படத்தில் பணியாற்றினார். அதன் பிறகு மீண்டும் ‘தூங்கா வனம்’ படத்தில் இனைந்தார்.

Aishwarya Rai Bachchan