நான்சி மலர்
சந்திரஹார் செயின் ஹிமாச்சல பிரதேசத்தில் மிகவும் பிரபலமாகும். தங்கத்தால் ஆன சின்ன மணிகளால் உருவாக்கப்பட்டிருக்கும். பண்டிகை காலத்தில் குலு பழங்குடி பெண்கள் அணிந்திருப்பார்கள்.
சூடா என்பது திருமணம் ஆன பஞ்சாபி பெண்கள் கைகளில் அணியக்கூடிய சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான வளையல்கள் இதை மணமகளின் தாய்மாமன் பெண்ணுக்கு பரிசளிப்பார்.
குட்டாபூசலு என்பது தென்னிந்திய பெண்கள் அணியக்கூடிய பாரம்பரியமான முத்துக்களால் செய்யப்பட்ட டிசைன் கொண்ட நெக்ல்ஸ். குட்டா என்றால் கொத்து என்றும் பூசலு என்றால் முத்து என்றும் பொருள். இது தெலுங்கு மாநிலத்தில் பிரபலம்.
ஜடநாகம் தமிழ்நாட்டில் திருமணத்தின் போது பெண்கள் கூந்தலை அலங்கரிக்க பயன்படுத்துவார்கள். தற்போது பரதநாட்டிய கலைஞர்கள் பயன்படுத்துகிறார்கள். இது பாம்பின் வடிவத்தைக் கொண்டிருப்பதால், 'ஜடநாகம்' என்று அழைக்கப்படுகிறது
ஜூன் பிரி அசாமின் பாரம்பரிய நகையாகும். இந்த அணிகலனை போடோ கம்யூனிட்டி மக்கள் அணிவார்கள். இது நிலவு, சூரியன், பூக்கள், பறவைகளின் டிசைனில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
கங்கன் என்பது செல்வத்தையும், குடும்ப உறவுகளையும் பிரதிபலிக்கும் வகையில் திடமான தங்கத்தால் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட வளையலாகும். இந்த வளையலின் முடிவில் மயில், கிளி, யானை போன்றவற்றை பயன்படுத்துவார்கள்.
காரன் பூல் ஜூம்கா மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் போன்ற இடங்களில் அணியப்படும் காதணியாகும். காரன் பூல் என்றால் காதுகளில் இருக்கும் பூ என்று பொருள்.
தமிழ்நாட்டில் மாங்கா மாலை நெக்லஸ் மிகவும் பிரபலமாகும். இதை திருமணத்திற்கு பெண்கள் அணிவார்கள். இந்த நெக்லஸ் சுத்தமான தங்கத்தால செய்யப்பட்டிருக்கும்.
அருணாச்சலப் பிரதேசத்தில் பெண்கள் பித்தளை வளையல்கள் அல்லது கொலுசுகளை அணிவதைக் காணலாம். அவை புனிதமானதாகவும், மதிப்புமிக்கதாகவும் கருதப்படுகின்றன. மேலும் அவை தாயிடமிருந்து மகளுக்கு தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகின்றன.
மகாராஷ்டிர நாத் அல்லது பேஷ்வாய் நாத் என்றும் அழைக்கப்படும் மூக்குத்தி, திருமணங்கள் போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களில் பெண்களால் அணியப்படுகிறது. இது குடும்பத்தின் அந்தஸ்து சின்னத்தையும், செல்வத்தையும் வெளிப்படுத்துகிறது.