தீபாவளிப் பற்றி உங்களுக்குத் தெரியாத 10 முக்கியமான வரலாற்று உண்மைகள்!

மகாலெட்சுமி சுப்ரமணியன்

Deepavali facts

1. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள்: தியாகையர், சாமா சாஸ்திரி, முத்துச்சாமி தீட்சிதர் ஆகிய மூவரும் 1834-ஆம் ஆண்டு தீபாவளித் திருநாளில்தான் முக்தி அடைந்தனர்.

Deepavali facts | Gemini image

2. கோவாவில் நரகாசுரன் வதம்: தீபாவளி முன்தினம் கோவாவில் நரகாசுரனின் கட்-அவுட்கள் வைக்கப்பட்டு சிறந்தவற்றுக்குப் பரிசு வழங்கப்படுகிறது; தீபாவளி நாளன்று அவை தீக்கிரையாக்கப்படுகின்றன.

Deepavali facts | Gemini image

3. நேபாளத்தில் 'தீகார்': நேபாள நாட்டில் தீபாவளித் திருவிழா 'தீகார்' என்ற பெயரில் ஐந்து நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

Deepavali facts | Gemini image

4. சிவகாசி பட்டாசு தொழில்: இந்தியாவில் பட்டாசு உருவாக்கும் தொழில் சிவகாசியில் 1923-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

Deepavali facts | Gemini image

5. மத்தாப்பின் பெயர் காரணம்: 'ஒளி' என்று பொருள்படும் 'மஹ்தாப்' என்ற உருது சொல்லிலிருந்துதான் 'மத்தாப்பு' என்னும் பெயர் உருவானது.

Deepavali facts | Gemini image

6. தஞ்சை ஓலைச்சுவடி குறிப்பு: தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள 'ஆகாச பைரவ ஆல்பம்' ஓலைச்சுவடிகளில் வானவெடிகளைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

Deepavali facts | Gemini image

7. அபயங்கர ஸ்நானம் (கங்கை வாசம்): தீபாவளி விடியற்காலையில் எண்ணெய் தேய்த்து நீராடுவதை 'அபயங்கம்' என்பர். அன்று இந்நீரில் கங்கை வாசம் செய்வதாக ஐதீகம்.

Deepavali facts | Gemini image

8. ​மகாராஷ்டிரப் பிரசாதம்: மகாராஷ்டிராவில் தனியாவையும் வெல்லத்தையும் சேர்த்து இடித்து, தீபாவளியன்று இறைவனுக்குப் படைத்து வழிபடுகிறார்கள்.

Deepavali facts | Gemini image

9. அமிர்தசரஸ் பொற்கோயில்: தீபாவளி நாளில் அமிர்தசரஸ் பொற்கோயில் முழுவதும் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டு கண்கவர் ஒளியில் ஜொலிக்கும்.

Deepavali facts | Gemini image

10. சிங்கப்பூர் மாரியம்மன் கோவில்: சிங்கப்பூரிலுள்ள மாரியம்மன் கோவிலில் தீபாவளியன்று சிறப்புமிக்க 'பூங்குழி வைபவம்' நடைபெறும்.

Deepavali facts | Gemini image
Women braid | Gemini image
சாதாரண ஜடைன்னு நினைக்காதீங்க... இதோட ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறு உங்களை வியக்க வைக்கும்!