கே.எஸ்.கிருஷ்ணவேனி
Women braid
1. இந்தியாவில் ஜடை பின்னுதல் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான, கலாச்சார மற்றும் பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கலை வடிவமாகும்.
2. இந்தியாவைத் தவிர எகிப்து, ஆப்பிரிக்கா, பண்டைய கிரேக்கம் மற்றும் ரோமானிய நாகரிகங்களிலும் ஜடை பின்னுதல் தனித்துவமான வரலாற்றைக் கொண்டுள்ளது.
3. ஆப்பிரிக்காவில் இது பழங்குடி அடையாளத்தையும், கிரேக்கம் மற்றும் ரோமில் மணிகள், தங்க ஆபரணங்கள் மூலம் ஆடம்பரத்தையும் வெளிப்படுத்தப் பயன்பட்டது.
4. தமிழ்நாட்டில் பரதநாட்டியம், திருமணங்கள் மற்றும் சடங்குகளில் ஜடை அலங்காரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
5. பல பின்னல்களை ஒன்றாகச் சேர்த்துப் பின்னும் முகலாயப் பாணி பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தைத் தருகிறது.
6. பிரெஞ்சு பின்னல் (French Braid): முன் தலையிலிருந்து தொடங்கி புதிய கூந்தல் இழைகளைச் சேர்த்துப் பின்னப்படும் இது, நாள் முழுவதும் கலையாமல் இருக்கும்.
7. டச்சுப் பின்னல் (Dutch Braid): இழைகளைக் கீழ்நோக்கிப் பின்னுவதன் மூலம் தலைமுடியின் மேல் தனியாகத் தெரியும் முப்பரிமாண (3D) தோற்றத்தைத் தருகிறது.
8. மீன்வால் பின்னல் (Fishtail Braid): முடியை இரண்டாகப் பிரித்து, மெல்லிய இழைகளை மாற்றி மாற்றிப் பின்னுவதன் மூலம் மீனின் வால் போன்ற வடிவமைப்பைப் பெறலாம்.
9. கயிறு பின்னல் (Rope Braid): இரண்டு இழைகளைத் தனித்தனியாக முறுக்கி, கயிறு போல் சுருட்டிப் பின்னும் எளிய நுட்பமாகும்.
10. நீர்வீழ்ச்சி பின்னல் (Waterfall Braid): பிரெஞ்சு பாணியில் சில இழைகளைக் கீழே தொங்கவிட்டு நீர்வீழ்ச்சி போன்ற தோற்றத்தை உருவாக்கும் இது விசேஷங்களுக்கு ஏற்றது.
பல்வேறு கலாச்சாரங்களின் மரபையும் நாகரிகங்களின் வரலாற்றையும் தாங்கி நிற்கும் ஜடை பின்னுதல், பெண்களின் கூந்தலுக்குப் பாதுகாப்பையும் அழகையும் தரும் ஒரு காலத்தால் அழியாத கலை வடிவமாகும்.