நாம் மறந்து போன 8 பாரம்பரிய விளையாட்டுகள்!

பொ.பாலாஜிகணேஷ்

அக்கால பாரம்பரிய விளையாட்டுக்களில் இன்று மறைந்து போன விளையாட்டுகள் சில உண்டு. இக்கால குழந்தைகளுக்கு அந்த பாரம்பரிய விளையாட்டுகள் பற்றி ஒரு தகவல் கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் செல்போன் கேம் ஹீரோக்கள் தான்.

Traditional Games

பாரம்பரிய விளையாட்டுக்கள் விளையாடிய காலத்தில் குழந்தைகளுக்கு மனதளவில் பயிற்சி உடல் அளவில் பயிற்சி மூளைக்கு பயிற்சி என எல்லாமும் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் இன்று அப்படி இல்லையே! இன்று குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளால் தீங்குகள் அதிகம். மறந்து போன மறைந்து கொண்டிருக்கும் பாரம்பரிய விளையாட்டுகள் சிலவற்றைப் இப்பதிவில் பார்ப்போம்.

Traditional Games

பச்சை குதிரை தாண்டுதல்: இதில் நண்பர்கள் பலரும் கூடி சா-பூ-த்ரீ முறையில் நண்பர் ஒருவரை குதிரையாக தேர்ந்தெடுத்து அவரை குனிய சொல்வார்கள். மற்ற நண்பர்கள் வரிசையாக வந்து குனிந்து இருக்கிற நண்பனின் முதுகை தாண்டி குதித்து ஓடுவர்.

Traditional Games

இப்படி பல நண்பர்கள் ஒவ்வொருவராக தாண்டும் சமயம் முதலில் யார் தாண்ட முடியாமல் அவுட் ஆகிறார்களோ அவர்கள் அடுத்த குதிரையாக மாறுவர். இது உடலுக்கும் கால்களுக்கும் சிறந்த பயிற்சி.

Traditional Game

பல்லாங்குழி: இது பெரும்பாலும் பெண்கள் விளையாடும் விளையாட்டு. அந்த காலத்தில் பெண்கள் அதிக நேரத்தை வீட்டில் செலவிடுவதால் இது பெண்களுக்கான விளையாட்டாக இருந்தது.

Traditional Game

சோழிகள், அல்லது புளியங்கொட்டைகளை சேகரித்து ஒவ்வொரு குழிகளிலும் எண்ணிக்கையின் அடிப்படையில் முத்துகளை இட்டு விளையாடுவர். இது கைக்கு நல்ல பயிற்சி மற்றும் மனக்கணக்கு பயிற்சியும்கூட.

Traditional Game

கோலிக்குண்டு: ஒரு வட்டத்துக்குள் பல கோலிகளை இட்டு, வட்டத்துக்கு வெளியே ஒரு கோலியினால் ஒரே அடியில் மற்ற கோலிகளை அடிக்க வேண்டும். இது கவன குவிப்பை அதிகரிக்கும் விளையாட்டு.

Traditional Game

பம்பரம்: இதுவும் கோலிகுண்டு போலத்தான். ஒரு வட்டத்திற்குள் பல பம்பரங்களை சேர்த்து வைத்து, ஒரு பம்பரத்தை வெளியிலிருந்து சுழற்றி, சுழலும் பம்பரத்தை கையில் லாவகமாக எடுத்து வட்டத்திற்குள் இருக்கும் மற்ற பம்பரத்தின் மேல் எரிய வேண்டும்.

Traditional Game

இச்சமயத்தில் வட்டத்திற்குள் இருக்கும் சில பம்பரம் உடைந்து விடும். ஆகையால் பம்பரம் தேர்வு சரியானதாக இருக்கவேண்டும்.

Traditional Game

ஆடுபுலி ஆட்டம்: பெயருக்கு ஏற்றார்போல் புலி ஆட்டை வேட்டையாடுவதுதான் விளையாட்டு. ஒருவர் 3 புலி காய்களை வைத்தும் மற்றொருவர் 15 ஆடுகளை வைத்தும் விளையாடுவர். புலி ஆட்டை வேட்டையாட விடாமல் ஆடுகள் புலியை முடக்க வேண்டும். இந்த விளையாட்டு யோசிக்கும் திறனை அதிகரிக்கும்.

Traditional Game

தாயம்: பெரும்பாலும் இதை வீட்டில் இருக்கும் வயதானவர்கள் விளையாடுவார்கள். இதில் பயன்படுத்தப்படும் தாயமானது பித்தளை அல்லது இரும்பினால் செய்யப்பட்டிருக்கும். கிராமங்களில் அந்த காலத்தில் எந்தவொரு வீட்டை தாண்டி சென்றாலும் தாய ஒலி கேட்கும்.

Traditional Game

இது நால்வர் வரை இணைந்து விளையாடும் விளையாட்டு. இதில் எவர் மையப்புள்ளிக்கு செல்கிறாரோ அவரே வெற்றிபெற்றவராய் கருதப்படுவார்.

Traditional Game

பாண்டி: சிறுமிகள் தெருக்களில் விளையாடும் விளையாட்டு இது. பெட்டி போன்ற சதுரத்தை வரைந்துக்கொண்டு, ஒற்றைக்காலை நொண்டிக்கொண்டு, காலால் சில்லை நகத்தியபடி, தாண்டி விளையாடுவர். இது காலுக்கு வலு சேர்க்கும்.

Traditional Game

கண்ணாமூச்சி: சிறுவர்கள் குழுக்களாக சேர்ந்து ஒருவரை தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் கண்களை மூடிக்கொள்ள மற்றவர்கள் மறைந்துக்கொள்வர், மறைந்துக்கொண்டவர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

Traditional Game

இந்த விளையாட்டில், புத்தியை உபயோகித்து ஒருவரின் இருப்பிடத்தை தெரிந்து கொள்வது, அவரைப்பற்றிய புரிதலை நமக்கு ஏற்படுத்தும். இருப்பினும் இது மிகச்சிறிய குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. ஏனெனில் அவர்கள் அபாயத்தை உணராமல் ஆபத்தான இடங்களில் ஒளிந்துக்கொள்ளலாம். ஓரளவு புரிதலும், நிதானமும் கொண்டவர்கள் மட்டுமே இதை விளையாடலாம்.

Traditional Game
Fresh Juices
காலையில் குடிக்க இந்த 7 ஜூஸ்கள் ரொம்ப ரொம்ப பெஸ்ட்!