காலையில் குடிக்க இந்த 7 ஜூஸ்கள் ரொம்ப ரொம்ப பெஸ்ட்!

பொ.பாலாஜிகணேஷ்

தற்போது பலர் தங்களது உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, இயற்கை வைத்தியங்களையும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களையும் நாடுகின்றனர். அதில் ஒன்றாக பலரும் பின்பற்றி வருவது காலையில் எழுந்ததும் ஏதேனும் ஒரு ஜூஸைக் குடிப்பது.

Fresh Juices

பாகற்காய் ஜூஸ்: உங்களுக்கு சரியாக பசி எடுப்பதே இல்லையா? மற்றும் உங்கள் உடலில் உள்ள பூச்சிகளை அழிக்க நினைக்கிறீர்களா? அப்படியெனில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடியுங்கள்.

Bitter Gourd Juice

இது உங்களின் செரிமான திரவத்தின் அளவை அதிகரித்து, பசியின்மையைப் போக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளையும் அழிக்கும். மேலும் பாகற்காய் ஜூஸ் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டுடன் வைக்கும்.

Bitter Gourd Juice

வேப்பிலை ஜூஸ்: இது உண்மையிலேயே மிகவும் கடினமான ஒன்று தான். ஆனால் இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

Neem Juice

இது இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க உதவும். முக்கியமாக இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற அற்புதமான ஓர் ஜூஸ்.

Neem Juice

கேரட் ஜூஸ்: நீங்கள் காலையில் கேரட் ஜூஸைக் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வையை மேம்படுத்துவதோடு, கேரட் ஜூஸில் உள்ள அதிகப்படியான பீட்டா-கரோட்டீன் முதுமையைத் தடுக்கும்.

Neem Juice

சுரைக்காய் ஜூஸ்: உங்களுக்கு சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் இருக்கிறதா? அப்படியெனில் சுரைக்காய் கொண்டு ஜூஸ் தயாரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள்.

Bottle Gourd

இதனால் உடலில் உள்ள அதிகப்படியான அமிலம் மட்டுப்படுத்தப்படும். சுரைக்காய் சக்தி வாய்ந்த சிறுநீர்ப் பெருக்கியாக செயல்படும்.

Bottle Gourd

அருகம்புல் ஜூஸ்: அருகம்புல்லில் நோய்த் தீர்க்கும் பண்புகள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக அமினோ அமிலங்கள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பொருட்கள் அதிகம் உள்ளன.

Arugambul Juice

எனவே இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், வயிறு மற்றும் செரிமான பாதைகள் சுத்தமாகி, செரிமான பிரச்சனைகள் தடுக்கப்படும்.

Arugambul Juice

கற்றாழை ஜூஸ்: கற்றாழை சரும அழகை மட்டும் அதிகரிக்க பயன்படுவதில்லை, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தான் பயன்படுகிறது.

Aloevera Juice

குறிப்பாக கற்றாழை ஜூஸை ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படுவதோடு, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை வேகமாக குறையவும் உதவும்

Aloevera Juice
Frog | Imge Credit: Pinterest
தவளை மழை நேரத்தில் மட்டும் கத்துவது ஏன் தெரியுமா?