ஆர்.வி.பதி
கடற்கரையில் உள்ள மணலைப் பயன்படுத்தி சிற்பக்கலைஞர்களால் வடிக்கப்படும் சிற்பங்கள் மணல் சிற்பங்கள் என அழைக்கப்படுகின்றன.
அலையுடன் கூடிய கடற்கரைப் பகுதிகளில் உள்ள மணலானது மணல் சிற்பம் வடிக்க ஏதுவாக இருக்கிறது.
கடற்கரைகளில் உருவாக்கப்படும் மணல் சிற்பங்கள் ஆற்றங்கரை ஓரங்களிலும் உருவாக்கப்படுகின்றன.
ஒரு மணல் சிற்பத்தை வடிவமைக்க குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் தேவைப்படுகிறது.
மணல் சிற்பங்கள் பொதுவாக சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த வடிவமைக்கப்படுகின்றன.
கலாசாரம், சமூகப் பிரச்சினைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல்வேறு கருப்பொருள்களில் மணல் சிற்பங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
கர்நாடக மாநிலம் மைசூரில் சாமுண்டி மலைகளின் அடிவாரத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் மணல் சிற்ப அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் புரியில் சந்திரபாகா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 முதல் 5 வரை சர்வதேச மணல் சிற்பக்கலை விழா நடைபெறுகிறது.
ஒடிசாவைச் சேர்ந்த பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தனது மணல் சிற்பங்கள் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
சென்னை உட்பட, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த அவ்வப்போது மணல் சிற்பங்கள் நமது கலைஞர்களால் உருவாக்கப்படுகின்றன.