Alsatian Dogs: உடல்நலம் சரி இல்லாதவர்களுக்கு நல்லதொரு தோழன்!

வாசுதேவன்

உலகில் பல்வகை வளர்ப்பு நாய் வகைகள் உண்டு. அதில் ஒரு வகை அல்சேஷியன் நாய்கள் ( Alsatian Dogs ). அவற்றைப் பற்றி சில தகவல்கள்.

Alsatians dog

இவை ஜெர்மன் ஷேப்பார்ட் (German Shepherd) இனத்தைச் சார்ந்தவை.

Alsatians dog

பிரிட்டனில் இவற்றை அல்சேஷியன் நாய்கள் ( Alsatian Dogs ) என்று கூறுகின்றனர்.

Alsatians dog

இந்த வகை இனம் உருவாக 1899 முதல் பாடு பட்டவர் மேக்ஸ் வோன் ஸ்டீபாநிடீஸ் ( Max von Stephanitz )

Alsatians dog

ஆடுகளை மேய்க்கும் இடங்களில் உதவ இந்த வகை நாய்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. காவல் துறையில் மோப்ப நாய்களாக பயன்படுத்தப்பட்டன.

Alsatians dog

உடல் நலம் இல்லாதவர்களுக்கு வழி காட்டியாகவும், துணையாகவும் செயல்படுகின்றன.

Alsatians dog

பல இடங்களில் வீடுகளை காக்கவும், வளர்ப்பு பிராணிகளாகவும் உள்ளன.

Alsatians dog

இவை சராசரியாக 10 லிருந்து 12 வயது வரை உயிர் வாழும்.

Alsatians dog

ஆண் நாய்கள் 60 - 65 செ. மீ பெண் நாய்கள் 55 - 60 செ. மீ உயரம் வளரும். எடை 30 - 40 கிலோ (ஆண்) ; 22 - 32 கிலோ ( பெண் ) இருக்கும்.

Alsatians dog

பெரும்பாலும் இரண்டு நிறங்கள் கலந்து காட்சி அளிக்கும். அதில் கருப்பு நிறம் இருக்கும். உடன் பழுப்பு (Tan), சாம்பல் (Grey) கலந்து இருக்கும்.

Alsatians dog

சில நாய்கள் முழுவதும் கருப்பு அல்லது வெள்ளை நிற தோற்றம் கொண்டதாகவும் இருக்கும்.

Alsatians dog

அல்சேஷியன் வகை நாய்கள் விருப்பத்துடன் கற்றுக்கொள்ளும் திறமைப் படைத்தவை.

Alsatians dog

இவற்றின் நினைவாற்றல் சக்தியும் அலாதியானது.

Alsatians dog

அமைதி காக்கும். அதே சமயத்தில் தேவைப்பட்டால் ஆக்ரோஷத்தை காட்ட தயங்காது.

Alsatians dog

நாய்கள் கண்காட்சிகளில் (Dog Shows) பங்குப்பெற்று பரிசுகளை அள்ளுவதிலும் குறை வைப்பது இல்லை அல்சேஷியன் வகை நாய்கள்.

Alsatians dog

அந்த கால சில சினிமாக்களில் முக்கிய பங்கு பெற்றுள்ளன. கோலிவுட் முதல் ஹாலிவுட் படங்கள் வரை பல படங்களில் இந்த நாய்களை காணலாம்.

Alsatians dog

குட்டிகளின் விலை ரூ 30000 வரையிலும் அதற்கு மேலும் விற்பனை செய்யப் படுகின்றன.

Alsatians dog
Adipuram
சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்!