கண்மணி தங்கராஜ்
தமிழகத்தில் ஆறாவது பெரிய நகரமான திருப்பூர் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நகரமாகும். தமிழ்நாட்டில் உள்ள ஒருசில பெரு நகரங்களில் இதுவும் ஒன்று.
தமிழகத்தின் "டாலர் சிட்டி" என்று அழைக்கப்படும் பெருமைமிக்க ஓர் நகரமாக திருப்பூர் உள்ளது. பருத்தி பின்னலாடை ஏற்றுமதியின் காரணமாக இந்த நகரம் இந்தியாவின் ‘பின்னலாடை தலைநகரம்’ என்று பெருமையோடு அழைக்கப்படுகிறது.
இந்தத் திருப்பூரில் 10,000 க்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் அமைந்திருக்கின்றன. அதோடு 6,00,000 க்கும் மேற்பட்டோர் இங்கு பணிபுரிந்து வருகின்றனர்.
கொங்கு மண்டலத்தின் மூன்றாவது மிகப்பெரிய மாநகராட்சியான இந்த நகரைத்தான் உலகில் உள்ள பல நாடுகள் தங்களது ஆடை உற்பத்திக்கு முதலில் தேர்வு செய்வர்.
ஆண்டு தோறும் பத்து ஆயிரம் கோடிக்கும் மேலான அந்நிய செலவாணியை இத்தொழில் ஈட்டித் தருகிறது.
திருப்பூர், ஆரம்ப காலத்தில் சிறு கிராமமாகவே இருந்திருக்கிறது. பின்பு படிப்படியாக வளர்ந்து இன்று தேசிய அளவில் பின்னலாடை தொழிலில் அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது.
சமீபத்தில் நடந்த ஆய்வின்படி இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது திருப்பூர்.
தமிழ்நாடு மட்டுமல்லாது, பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். இதன்மூலம் இத்தொழில் பலரது வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்கிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் பின்னல் ஆடைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் வரவேற்பை பெற்றவை மற்றும் பிரபலமானவை.
கையால் செய்யப்படும் காகிதம் மற்றும் சுத்தமான எண்ணெய் தயாரிக்கும் தொழிலும் திருப்பூரில் நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக ‘காதி வஸ்திராலயத்தின்’ தலைமையிடமாக திருப்பூர் இருந்துவருகிறது.
2021-22 ஆம் ஆண்டு நிலவரப்படி, திருப்பூரிலிருந்து 480 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆடைகளை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவின் அனைத்து ஜவுளி ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 54% பங்களிக்கிறது.
திருப்பூர், பருத்தி பயிரிடப்படும் வளமான விவசாய நிலங்களால் சூழப்பட்டுள்ளது. உள்நாட்டில் கிடைக்கும் பருத்தி ஜவுளித் தொழிலுக்கான மூலப்பொருகளை ஆண்டுதோறும் விநியோகித்து வருகின்றனர்.
பின்னலாடைத் தொழிலில் அதிநவீன பின்னலாடை தொழில்நுட்பத்தை பின்பற்றுவதில் திருப்பூர் முன்னணியில் இருந்து வருகிறது. இது ஆடை உற்பத்தியின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
ஜவுளி ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கு மட்டுமே உரிய ஏராளமான ஆராய்ச்சி நிறுவனங்களைக் கொண்டுள்ளது இந்த திருப்பூர். இந்த நிறுவனங்கள் புதுமையான ஜவுளி தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில் நுட்பங்களின் வளர்ச்சிக்காகப் பங்களிக்கின்றன