நான்சி மலர்
உலகிலேயே மிக அழகிய கட்டடக்கலைக்கு சான்றாக விளங்கும் தனித்துவமான வரலாற்றையும், பிரம்மாண்டத்தையும் கொண்ட 10 அரண்மனைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
Palace of versailles பிரான்ஸ் கட்டடக்கலையின் உச்சம் என்றே சொல்லலாம். இதனுடைய கண்ணாடி கூடம் மற்றும் பரந்த தோட்டம் உலக புகழ் பெற்ற இடங்களாகும்.
சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் அமைந்துள்ளது Forbidden city. இது தான் உலகின் மிக பெரிய அரண்மனை வளாகம். இது பல நூற்றாண்டுகளாக சீன பேரரசர்களின் இருப்பிடமாக இருந்திருக்கிறது.
இந்தியாவில் உள்ள மைசூர் அரண்மனை இரவில் 97,000 மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கம் போல ஜொலிப்பது பார்ப்போரை பிரமிக்க வைக்கும்.
Neuschwanstein castle பவேரியாவில் ஆல்ப்ஸ் மலை உச்சியில் அமைந்துள்ள இந்த அரண்மனை மேகங்களுக்கு நடுவிலே கனவு உலகம் போல காட்சித் தரும்.
Alambhara இஸ்லாம் மற்றும் ஐரோப்பிய கட்டடக்கலையின் கலவையாக கட்டப்பட்டிருக்கிறது. இந்த அரண்மனையில் உள்ள சுவர்களில் உள்ள Geometric design மற்றும் வேலைப்பாடுகள் புகழ் பெற்றவை.
Pena palace ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. இதனுடைய பிரகாசமான மஞ்சள், சிவப்பு நிறத்திற்காக புகழ் பெற்றது.
Hawa Mahal, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இது 'காற்றின் அரண்மனை' என்று அழைக்கப்படுகிறது. இதில் 953 சிறிய ஜன்னல்கள் உள்ளன.
Topkapi Palace துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அரண்மனை ஆகும். இது முன்னாள் ஒட்டோமான் சுல்தான்களின் வசிப்பிடமாக இருந்தது. இது அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கை பிரதிபலிக்கும் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்கிறது.
Schonbrunn Palace வியன்னாவில் அமைந்துள்ளது. இது அதன் அழகிய தோட்டங்கள் மற்றும் பரந்த அறைகளுக்காக ஐரோப்பாவில் மிகவும் பிரபலமானது.
Buckingham Palace, பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் வசிப்பிடம். இது லண்டனின் மிக முக்கியமான அடையாளமாகும்.