நான்சி மலர்
கேரளாவில் இருக்கும் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலுக்கு கீழே யாராலும் திறக்க முடியாத கதவு ஒன்று இருக்கிறது. அந்த கதவு எப்போது திறக்கப்படுகிறதோ அன்று இவ்வுலகம் அழிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.
ஆந்திர பிரதேசத்தில் உள்ள லேபாக்ஷி கோவிலில் பழமை வாய்ந்த அந்தரத்தில் தொங்கும் தூண்களை பார்க்க முடியும். இதை பார்க்கவே நிறைய மக்கள் அந்த கோவிலுக்கு செல்கிறார்கள்.
கேதரேஸ்வரர் கோவில் மகாராஷ்டிராவில் உள்ள ஹரிசந்திர காட் மலைக்கு மேல் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் இருக்கும். அதில் கடைசி தூண் இடிந்து விழுந்தால் உலகம் அழிந்துவிடும் என்பது மக்களின் நம்பிக்கை.
பிஜிலி மகாதேவ் கோவிலில் உள்ள சிவலிங்கத்தை ஒவ்வொரு 12 ஆண்டுக்கு ஒருமுறை மின்னல் தாக்கி துண்டு துண்டாக உடைத்துவிடுமாம். உடைந்த பாகத்தை வெண்ணெய், மாவு போன்றவற்றை பயன்படுத்தி ஒட்டி மறுபடியும் சிவலிங்கத்தை உருவாக்குவார்கள்.
அசாம் மாநிலத்தில் கௌகாத்தி நகருக்கு பக்கத்தில் அமைந்திருக்கிறது காமாக்கியா தேவி கோவில். இந்த கோவிலில் நடத்தப்படும் அம்பாசி திருவிழா தேவியின் மாதவிடாய் காலத்தை குறிக்கும் விதமாக நடத்தப்படுகிறது. அச்சமயம் பிரம்மபுத்திரா நதி சிவப்பு நிறமாக மாறிவிடும்.
உத்திரபிரதேசத்தின் பிருந்தாவன் மாவட்டத்தில் அமைந்துள்ளது நிதிவான் கோவில். இக்கோவிலில் இரவு நேரத்தில் கிருஷ்ணர் கோபியருடன் நடனமாடுவதாக சொல்லப்படுகிறது.
ஜூவாலாதேவி கோவில் ஹிமாச்சால் பிரதேசத்தில் உள்ள காங்கிராவில் இருக்கிறது. இந்த கோவிலில் தரையில் இருந்து வெளிப்படும் நெருப்பை கடவுளாக வணங்குகிறார்கள்.
குஜரத்தில் உள்ள ஸ்தம்பேஸ்வரர் மகாராஷ்டிரா கோவில் ஒருநாளைக்கு இரண்டு முறை கடலுக்குள் மூழ்கி திரும்பவும் மேலே வரும்.
ஒரிசாவில் உள்ள கோனார் சூரிய கோவிலில் ஏழு குதிரைகள் 24 சக்கரங்கள் கொண்ட தேரை இழுத்து செல்வதுப்போல அமைந்துள்ளது. ஏழு குதிரைகள் வாரத்தின் 7 நாட்களையும், 24 சக்கரங்கள் 24 மணி நேரத்தையும் குறிக்கிறது.
தஞ்சை பெரிய கோவில் கோபுர உச்சியில் ஒரே கல்லால் செதுக்கப்பட்ட 80 டன் எடை உள்ள கும்பம் இருக்கிறது. இதை எப்படி 216 அடி உயரம் உள்ள கோபுரத்தில் ஏற்றி வைத்திருப்பார்கள் என்பது விஞ்ஞானிகளையே மிரள வைக்கிறது.