கண்மணி தங்கராஜ்
சென்னை மாநகராட்சிதான் இந்தியாவின் மிகப் பழமையான மாநகராட்சியாகும். இது கி.பி.1688-லேயே ‘மெட்ராஸ் கார்ப்பரேஷன்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டது.
இந்தியாவின் மிகப் பழமையான ரயில் நிலையம் சென்னையில் உள்ள 'ராயபுரம்' ரயில் நிலையம்தான். பிரிட்டிஷ் கால கட்டுமானத்தை இன்னும் பழமை மாறாமல் வைத்திருப்பது ராயபுரம் ரயில்வே நிலையம் மட்டும்தான்.
இந்தியாவின் மிகப் பழமையான கிரிக்கெட் ஸ்டேடியம் சென்னையில் உள்ளது. சேப்பாக்கத்தில் அமைந்துள்ள இது எம்.ஏ.சிதம்பரம் மைதானம் என்ற பெயரால் தற்போது அழைக்கப்பட்டு வருகிறது.
இந்தியா மட்டுமின்றி வங்காள விரிகுடா பகுதியின் மிகப்பெரிய செயற்கை கடல் துறைமுகமானது சென்னையில்தான் உள்ளது.
இந்தியாவிலேயே சென்னையில் உள்ள மெட்ராஸ் பல்கலைக்கழகம்தான் இசையில் இளங்கலை பட்டப்படிப்பை 1930ஆம் ஆண்டு முதன்முதலாக அறிமுகப்படுத்தியது.
சென்னையில் அண்ணாசாலையில் அமைந்துள்ள 'ஸ்பென்சர் பிளாசா' மால், இந்தியாவில் உள்ள மிகப் பழமையான ஷாப்பிங் மால்களுள் ஒன்று. இது 1863ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின்போது கட்டப்பட்டது.
மெட்ராஸ் உயர் நீதிமன்ற கட்டடம் உலகின் இரண்டாவது பெரிய நீதித்துறை அமைப்பாகும். முதல் இடத்தை லண்டனில் உள்ள கட்டடம் ஒன்று ஆக்கிரமித்துள்ளது.
நேஷனல் ஜியாகிராபிக் எடுத்த உணவு சர்வேயில் சென்னையின் உணவான Chicken-65 தான் உலகின் மிகச் சுவையான உணவுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
சென்னையை ஆசியாவின் 'டெட்ராய்ட்' என்ற அடைமொழியால் அழைக்கின்றனர் உலக ஆட்டோமொபைல் துறையினர். ஏனெனில் அதிகளவிலான ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலைகள் இங்கு செயல்பட்டுவருகின்றன.
BMW-காரின் முதல் உற்பத்தி ஆலையானது 2007ஆம் ஆண்டு முதன்முதலாக சென்னையில்தான் நிறுவப்பட்டது.