கடிகாரங்களின் வரலாறு!

கண்மணி தங்கராஜ்

பண்டைய சூரிய கடிகாரங்களின் கண்டுபிடிப்பு முதல் நவீன அணுக் கடிகாரங்களின் இன்றைய ஆட்சி காலம்வரை, மனிதர்கள் எப்போதுமே காலத்தால் ஈர்க்கப்பட்டு, அதை அளவிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் பல்வேறு வழிகளை உருவாக்கியுள்ளனர்.

Ancient sunlight Watch | Img Credit: The Schools' Observatory

பகல் நேரத்தைக் குறிக்க முதன்முதலில் சூரியனின் நிலையைப் பயன்படுத்திய சூரியக் கடிகாரங்கள் கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள் உட்பட பிற நாகரிகங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

Ancient sunlight Watch

சூரிய கடிகாரங்கள் மிகவும் துல்லியமான முறையில் நேரத்தை கணக்கிடுவதில்லை. மற்றும் இதனை பகலில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

Ancient sunlight Watch | Img Credit: Dipidiomas.unitru.edu.pe

தண்ணீர் கடிகாரங்கள் கிமு 1400 இல், எகிப்தியர்களால்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நீர் கடிகாரம், நேரத்தை அளவிடுவதற்கு நீரின் ஓட்டத்தைப் பயன்படுத்தியது.

Water clock | Img Credit: Pinterest

நீர் கடிகாரம் சூரியக் கடிகாரத்தைவிட துல்லியமானதாகவும், இரவு மற்றும் பகல் நேரங்களிலும் கூட இதனைப் பயன்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டன.

Water clock | Img Credit Pinterest

13ஆம் நூற்றாண்டின் இறுதியில் இடைக்காலத்தில் அறிமுகமானதுதான் இயந்திரக் கடிகாரம். இது மிகவும் கனமான மற்றும் அதிகமான எடை கொண்டு வேலை செய்தன. பின்னர், 1450ஆம் ஆண்டு ஒருசில திருத்தங்களின் அடிப்படையில் சிறிய வடிவிலான கடிகாரங்கள் சாத்தியமானது.

First Mechanical clock

16 ஆம் நூற்றாண்டின் சமயத்தில் ஒருசில செல்வந்தர்களின் வீட்டில் மட்டுமே கடிகாரங்கள் வைத்திருந்தனர். ஆனால், அவை விலை உயர்ந்ததாக இருந்துள்ளது.

Wall clock | Img Credit: Forbes

1510இல் பாக்கெட் கடிகாரத்தின் கண்டுபிடிப்பு கடிகார தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது.

Pocket clock | Img Credit: Frankenmuth clock company

ஜெர்மன் பூட்டுத் தொழிலாளியான ‘பீட்டர் ஹென்லைன்’தான் இந்த பாக்கெட் கடிகாரத்தைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர்.

Peter Henlein | Img Credit: Wikipedia

1657ஆம் ஆண்டில், டச்சு வானியலாளர் ‘கிறிஸ்டியன் ஹியூஜென்’ஸின் பெண்டுலம் கடிகாரத்தின் கண்டுபிடிப்பானது கடிகாரங்களின் நம்பகத்தன்மையை அதிகரித்தது.

Christiaan Huygens | Img Credit: APS

1675-ல் கண்டுபிடிக்கப்பட்டது இந்த ஸ்பைரல் வாட்ச் ஸ்பிரிங். இந்த வகையானது ஒரு பெரிய, பதக்க-பாணியினாலான கடிகாரங்களிலிருந்து சிறிய பாக்கெட் வடிவிலான கடிகாரங்களை உருவாக்க அனுமதித்தது.

Spiral watch spring | Img Credit: Breguet

ஸ்டாப்வாட்ச் 1821ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. கடிகார வரலாற்றின் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஸ்டாப்வாட்ச் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று சொல்லலாம். ஏனெனில் இது மிகத் துல்லியமாக குறுகிய காலங்களை அளவிட உதவியுள்ளது.

Stop watch | Img Credit: New atlas

மின்சார கடிகாரம் 1840- இல் ‘ஸ்காட்ஸ்மேன் அலெக்சாண்டர் பெயின்’ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. மின்சார கடிகாரம் கடிகார தொழில்நுட்பத்தில் ஒருவித புரட்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் இது மிகவும் துல்லியமான மற்றும் நம்பகமான கடிகாரங்களை பெருமளவில் உற்பத்தி செய்ய அனுமதித்தது.

Alexander Bain | Img Credit: John o'groat journal

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், குவார்ட்ஸ் கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டது. இது மின்சார கடிகாரத்தைவிடவும் துல்லியமானது.

Quartz watch

உலகின் மிகத் துல்லியமான கடிகாரம் என்ற பெருமைக்குரியது இந்த அட்டாமிக் கடிகாரங்கள். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ‘லூயிஸ் எசன்’ என்பவரால்தான் இந்த அட்டாமிக் கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டது.

Louis Essen | Img Credit: SPIE

கடிகாரங்களின் இந்த ஆயிரம் ஆண்டு பயணமானது பண்டைய சூரிய கடிகாரங்களில் தொடங்கி இன்றைய நவீன அட்டாமிக் கடிகாரங்கள் வரை ஒரு நீண்ட அற்புதமான தொழில்நுட்ப பயணமாகும்!

Atomic clocks | Img Credit: Wiener
surukkupai seithigal