சுருக்குப்பை செய்திகள் 06.04.2024

கல்கி டெஸ்க்

மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு. டெல்லியில் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி இணைந்து வெளியிட்டனர்.

Sonia Gandhi, Mallikarjun Kharge, Rahul Gandhi

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் பொய் மூட்டை என பாஜக செய்தி தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி விமர்சனம். 60 ஆண்டு காலம் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியை நிறைவெற்றியேதேயில்லை என்றும் சாடல்.

Sudhanshu Trivedi, rahul gandhi

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை கோவை என தமிழகத்தில் 44 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை.

Income tax Raid

மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்க மேற்கொள்ளும் பணிகளின் போது கூட்டம் கூடி சத்தம் எழுப்புவதால் இடையூறு. சத்தம் கேட்டு சிறுத்தை ஓடி விடுவதால் பொதுமக்கள் வனத்துறைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

Mayiladuthurai Leopard

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 18வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி. 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.

SRH

தேர்தல் நடத்தல் விதிமுறைகளை மீறியதாக பாஜக, என் ஆர் காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ். இரு கட்சிகளின் பொது செயலாளர்களும் இன்றைக்குள் விளக்கம் அளிக்க உத்தரவு.

BJP,Congress, Election commision

இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என கூறி அதிர வைத்த கங்கனா ரனாவத். பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத்தை வலைதளங்களில் வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள்.

Kangana Ranaut

அமெரிக்காவில் நியூயார்க் நியூ ஜெர்சி உள்ளிட்ட நகரங்களில் நிலநடுக்கம். கட்டிடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதி.

New Jersey Earthquake

பூமியை தற்காலமாக குளிர்விக்க சூரிய கதிர்களை மீண்டும் விண்வெளிக்கு திருப்பி அனுப்புவது குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சோதனை.

Earth, America Scientist

மீண்டும் களத்திற்கு திரும்பும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்பிரா ஆர்ச்சர். பாகிஸ்தானுக்கு எதிரான t20 தொடரில் இடம் பெறுவார் என தகவல்.

Jofra Archer | Image Credit: gqindia

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 19 வது லீக் போட்டியில் பெங்களூர், ராஜஸ்தான் அணிகள் மோதல். ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறவுள்ளது.

RCB vs RR

இந்தியாவில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை சீர்குலைக்க சீனா முயற்சி; AI தொழிற்நுற்பத்தை பயன்படுத்தி குழப்பங்களை உண்டாக்க சதி என Microsoft நிறுவனம் எச்சரிக்கை.

AI, China, Microsoft, Election

அனைத்து வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தலைமை அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவு.

Sathya Pratha Sahoo, Election poll station

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்தி நடிகர் ரன்வீர் சிங்குடன் 'தலைவர் 171' படத்தில் நடிக்கக் கேட்டு வருவதாக தகவல்.

Thlaivar 171, Ranveer Singh, Lokesh Kanagaraj

தனுஷின் 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், தமிழ் புத்தாண்டு தினத்தில் படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டம்.

Raayan Movie
surukkupai seithigal