சந்தாலிகள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

கண்மணி தங்கராஜ்

சந்தாலிகள் இந்தியாவின் மிகப்பெரிய பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் அதிகளவில் வாழ்கின்றனர்.

Santali | Image Credit: Wikipedia

தெற்காசியாவில் 5 மில்லியனுக்கும் அதிகமான தனிநபர்களைக் கொண்ட மிகப்பெரிய சமூகமாக வாழ்ந்து வருகின்றனர் இந்த சந்தால் கிராம மக்கள்.

Santali

சந்தாலிகள் ஆஸ்திரேசியாடிக் மொழியான ‘சந்தாலி’ பேசுகிறார்கள்.

Santali Language

பாரம்பரிய நடனங்கள் மற்றும் இசையுடன் சொஹ்ராய், பஹா, கரம், தஷைன், சக்ரத், மஹ்மோர், ருண்டோ மற்றும் மாக்சிம் போன்ற பல்வேறு பண்டிகைகளை சாந்தாலிகள் கொண்டாடுகின்றனர்.

Santali Tradition

சந்தாலிகள் ஏழு அங்கீகரிக்கப்பட்ட திருமண வடிவங்களைக் கொண்டுள்ளனர், அவற்றுள் ஓடிப்போதல், விதவை மறுமணம் உட்பட வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. விவாகரத்து அவர்களின் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்கது.

Santali | Image Credit: ostm

சந்தால் கிராமங்கள் முழுவதுமாக திறந்தவெளி கலைக்கூடங்கள் காணப்படுகின்றன. இக்கலைக்கூடங்களின் சுவர்கள் பழங்குடியினரின் வாழ்க்கையை சித்தரிக்கும் கற்பனை ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதற்காக பயன்படுத்தப்படும் வண்ணங்கள் பெரும்பாலும் தாவரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவையாகும்.

Santali Drawings | Image Credit: fizdi

சந்தல்கள் நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனங்களை அதிகளவில் விரும்புவர். குறிப்பாக கமக், தோல், சாரங்கி மற்றும் புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவர்.

Santali Music Instrument

சந்தாலிகள் இயற்கையோடு இணைக்கப்பட்ட வாழ்க்கை முறையை பின்பற்றுகின்றனர். அந்தவகையில் இந்த சமூகத்தில் பெரும்பாலான மக்கள் மீன் பிடித்தல், கால்நடை வளர்ப்பு மற்றும் தங்களுடைய நிலத்தில் விவசாயம் செய்து அதனயே நம்பி வாழ்ந்தும் வருகின்றனர்.

Santali | Image Credit: santhaledisom

‘ஓலா’ என்று அழைக்கப்படும் சந்தாலிகளின் வீடுகள் அவற்றின் வெளிப்புறச் சுவர்களில் தனித்துவமான மூன்று வண்ண வடிவத்தைக் கொண்டிருகின்றன. அதாவது கீழே கருப்பு மண், நடுவில் வெள்ளை மற்றும் மேலே சிவப்பு.

Santali House | Image Credit: reddit

சந்தாலிகளின் மத வாழ்க்கைச் சுழற்சியில் ‘தாமோதர் நதி’ ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. இறந்தவரின் சாம்பல் அமைதியான மறுவாழ்வுக்காக இந்த நதியில் கரைக்கபடுகிறது.

Damodar River

சந்தால் கிராமங்கள், பூர்வீக மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்பட்ட உணவை வழங்குகின்றன. உருளைக்கிழங்கு மற்றும் அரிசியுடன் காட்டு பீன்ஸ் போன்ற உணவுகளும், மீன்களும் பொதுவான மற்றும் சுவையான விருப்பங்கள்

Santali Food

மரவேலை, மர வேலைப்பாடு, கூடை வேலை, பாய்களை செய்தல், பழங்குடியினர் சந்தைகளில் தங்கள் பொருட்களை விற்பது போன்றவற்றில் சாந்தாலிகள் திறமையானவர்களாக விளங்குகின்றனர்.

Santali Things | Image Credit: indiantribalheritage

சந்தால் கிராமங்களில் மாலை நேரங்களில் நெருப்பு மூட்டி, அதைச் சுற்றி மேளம் தாளங்களுடன் பழங்குடி மக்கள் நடனமாடுவது பிரபலம். இந்த நடனங்கள் பாரம்பரியத்தை எதிரொலிக்கும். கோலாகலமான சூழ்நிலையை உருவாக்கும்.

Santali | Image Credit: wikimedia

பழங்குடி சமூகமாக இருந்தாலும், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் போன்ற பகுதிகளில் பள்ளி சார்பு கல்வி விழிப்புணர்வு காரணமாக சந்தாலிகள் அதிக கல்வியறிவு விகிதங்களைக் கொண்டுள்ளனர்.

Santali

ஜார்கண்ட் முதல்வர் ‘ஹேமந்த் சோரன்’ ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் லெப்டினன்ட் கவர்னர் ‘கிரீஷ் சந்திர முர்மு’ மற்றும் இந்திய ஜனாதிபதி ‘திரௌபதி முர்மு’ போன்றவர்கள் இந்திய சமூகத்தில் குறிப்பிடத்தக்க மிக முக்கிய நபர்களாக முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

Hemant Soren, G. C. Murmu, Droupadi Murmu

சந்தால் பெண்கள் தங்கள் கலைத்திறன்களுக்காக அறியப்பட்டவர்கள். அவர்களின் படைப்பாற்றல் மற்றும் கலாச்சார வெளிப்படுத்தும் வகையில் சுவர்களில் உருவங்கள் மற்றும் வடிவமைப்புகள் உள்ளன.

Santali Drawings | Image Credit: fizdi
Surukkupai seithigal