சுருக்குப்பை செய்திகள் 04.04.2024

கல்கி டெஸ்க்

மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக ஏப்ரல் 12ஆம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வருகை. கோயம்புத்தூரில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் பங்கேற்பதாக தகவல்.

Rahul Gandhi | Image Credit: ipsos

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருக்கலாம் என கருதப்படும் பகுதிகளில் 7 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு. 10ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு.

leopard, school students

சென்னை நாகர்கோவில் இடையே வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு.

vande bharat special train | Image Credit: indiarailinfo

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நள்ளிரவில் வாட்ஸ்அப் சேவை பாதிப்பு. குறுஞ்செய்திகளை அனுப்ப முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதிக்கு உள்ளானதாக தகவல்.

whatsapp service affected

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 16வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி. 106 ரன் வித்திாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது.

KKR

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் 108 டிகிரி அளவுக்கு வாட்டி வதைக்கும் வெயில். தமிழகத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளத்தாக இந்திய வானிலை மையம் தெரிவித்தது.

Summer Heat

தேர்தல் விதிமீறல் தொடர்பாக சி-விஜில் செயலி மூலம் இதுவரை 2193 புகார்கள் வந்துள்ளன. பெரும்பாலான புகார்கள் சுவர் விளம்பரம் தொடர்பானவை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாப் சாகு தகவல்.

Sathya Pratha Sahoo, c vigil app

டெல்லியில் இன்று கூடுகிறது காவேரி மேலாண்மை ஆணைய கூட்டம். மேகதாது அணைத் திட்டம் குறித்து விவாதிக்க கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளதாக தகவல்.

Meghadatu dam project, kerala govt

அமலாக்கத் துறை தன்னை கைது செய்தது சட்ட விரோதம் என அறிவித்தது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு சம்மந்தமான வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்குகிறது டெல்லி உயர் நீதிமன்றம்.

Arvind Kejriwal, Supreme court

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக தேர்தல் பரப்புரை பயணம் தீடீர் ரத்து. இன்றும் நாளையும் பிரச்சாரம் மேற்கொள்ளுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அமித்ஷா பயணம் ஒத்திவைப்பு.

Amit shah

தமிழ்நாட்டில் நேற்று மட்டும் மின் நுகர்வு 430.13 மில்லியன் யூனிட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மின் வெட்டு இல்லாத நிலையை தமிழகம் எட்டியுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்.

Electricity consumption, Thangam Thennarasu

தைவான் நிலநடுக்கத்தில் சாய்ந்த 10 மாடி கட்டிடம் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு. ஈடுபாடுக்குள் சிக்கியவர்கள் மீட்பு.

Taiwan Earthquake

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 17 வது லீக் போட்டியில் குஜராத் பஞ்சாப் அணிகள் மோதல். அகமதாபாத் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறவுள்ளது.

GT vs PK

TNPL T20 தொடர் ஜூலை 5ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி சேப்பாக் அணியுடன் கோவை அணி மோதுக்கிறது.

TNPL T20 2024

ஹர்திக் பாண்டியா தலைமை மீது ரோஹித் சர்மா கடும் அதிருப்தி. நடப்பு சீசன் உடன் மும்பை அணியில் இருந்து ரோஹித் சர்மா விலக உள்ளதாக தகவல்.

Rohit Sharma, Hardik Pandya

தமிழ்நாட்டில் டெஸ்லா நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலை அமைப்பது குறித்து 3 மாநிலங்களில் இந்த மாதத்தில் ஆய்வு நடத்துக்கிறது அமெரிக்காவிலியருந்து வரும் குழு.

Tesla Car Company

அருண் விஜய் நடிக்கவுள்ள புதிய த்ரில்லர் படத்தில், அவருக்கு ஜோடியாக 2 பேர் நடிக்கவுள்ளனர். கிருஷ் திருக்குமரன் இயக்கவுள்ள இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி இருவரும் நடிக்கவுள்ளனர். படத்துக்காக தனது உடல் எடையை அருண் விஜய் குறைத்து வருகிறாராம்!

Arun vijay movie
surukkupai seithigal