கண்மணி தங்கராஜ்
சவுதி அரேபியா இஸ்லாமிய மதத்தின் பிறப்பிடமாகவும், உலகளவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித ஆலயங்களான மெக்கா மற்றும் மதீனாவின் தாயகமாகவும் உள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள தம்மாம் நகரில் இருக்கும் 'கிங் ஃபஹத்' சர்வதேச விமான நிலையம் தான் உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையமாகும். இந்த விமான நிலையத்தின் மொத்தப் பரப்பளவு 9,080 ஏக்கர்.
இந்த நாட்டில் இஸ்லாமிய மதத்தை சேராதவர்கள் நாட்டின் குடிமகனாக இருக்க இயலாது. துபாய் போன்ற நாடுகளில் நீங்கள் முதலீடுகள் மூலம் குடிமகனாகலாம். ஆனால் சவுதி அரேபியாவின் விதிமுறைகள் மிகவும் கடுமையானவை.
எண்ணெய் முதன்முதலில் சவுதி அரேபியாவில் உள்ள ‘தம்மம்’ எண்ணெய் வயலில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, சவுதி அரேபியா ஒரு நாளைக்கு சுமார் 10.8 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.
சவுதி அரேபியா பெரும்பாலும் ஒரு பாலைவனமாகும். இந்த நாட்டின் 95% நிலப்பகுதியானது பாலைவனம் அல்லது அரைப் பாலைவனம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் மிகப்பெரிய மணல் பாலைவனமான ரப் அல்-காலியும் இதன்கீழ் அடங்கும்.
சவுதி அரேபிய மக்கள், வியக்கத்தக்க வகையில் வரலாற்று ரீதியாக ஒட்டகங்களை தங்களுடைய போக்குவரத்துக்காக நம்பியிருக்கின்றனர். ஆனால் ஆஸ்திரேலியாவில் இருந்துதான் ஒட்டகங்களும் மணலும் இறக்குமதி செய்யப்படுகிறது.
பாலினத்தால் பிரிக்கப்பட்ட நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. அந்த வகையில் அறிமுகமில்லாத ஆண் மற்றும் பெண் இருவருக்கும் இடையிலான தொடர்புகளுக்கு கடுமையான தண்டனைகள் மற்றும் வரம்புகள் உள்ளன. ஆனால், சமீபத்திய மாற்றங்களின்கீழ் பொது இடங்களில் பாலின அடிப்படையிலான விதிகளில் சில தளர்வுகள் ஏற்பட்டுள்ளன.
சவுதி அரேபியாவில் பெண்கள் கண்ணியமாக உடை அணிய வேண்டும், இறுக்கமான ஆடைகள், சீ-த்ரூ பொருட்கள் மற்றும் அதிகமான மேக்கப் ஆகியவற்றில் அதிக கட்டுப்பாடுகள் உள்ளன.
'ஆண் பாதுகாவலர்' என்ற அமைப்பின்கீழ், ஒரு ஆண் ஒரு சவுதி பெண்ணின் வாழ்க்கையை பிறப்பு முதல் இறக்கும் வரை கட்டுப்படுத்தி அவள் சார்பாக முக்கியமான முடிவுகளை எடுக்கிறான். இந்த அமைப்பு இந்நாட்டில் பெண்களின் உரிமைகளுக்கு குறிப்பிடத்தக்க தடையாக உள்ளது