சுருக்குப்பை செய்திகள் (29.03.2024)

கல்கி டெஸ்க்

தேர்தலையொட்டி ஏப்ரல் 4ஆம் தேதி தமிழகம் வரும் அமித் ஷா மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டம். ஏப்ரல் 5ஆம் தேதியன்று சென்னையிலும் பரப்புரையில் ஈடுபடுவார் என பாஜகவினர் தகவல்.

Amit Shah

தமிழகத்தில் முன்னணி கட்சிகளின் வேட்பாளர் அனைவரின் வேட்பு மனுக்களும் ஏற்பு. 39 தொகுதிகளில் நடைபெற்ற பரிசீலனையில் 1085 மனுகள் ஏற்கபட்டதாக தேர்தல் ஆணையம் தகவல்.

Nomination Filling, Election Commision

திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல். உணவு தேடி வரும் என்பதால் பாதையாத்திரை செல்வோர் கவனமுடன் இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை.

Thirupathi

மாலத்தீவில் கடல் நீர் கசிவதால் நிலத்து அடி நீர் உப்பு தன்மை அதிகரித்ததால் குடிநீர் தட்டுபாடு. தீபத்தில் பனிப்பாறை உருகி சேகரிக்கப்பட்ட 1500 டன் குடிநீரை மாலத்தீவுக்கு கப்பலில் அனுப்பியது சீனா.

Maldives

டைட்டானிக் பட க்ளைமேக்ஸில் ரோஸ் கதாபாத்திரம் கடலில் மூழ்காமல் இருக்க பிடித்திருந்த கதவு 6கோடி ரூபாய்க்கு ஏலம். ரோஸ் அணிந்திருந்த ஆடை, கப்பிலின் ஸ்டரிங்கு வீல் உட்பட பல்வேறு பொருட்கள் லாஸ்வேகசில் ஏலம்.

Titanic Movie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடி க்கும் 171வது படத்தின் போஸ்டர் வெளியீடு. ஏப்ரல் 22ஆம் தேதியன்று படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என தகவல்.

Thalaivar171

நெல்லை - நாகர்கோவில் இடையே முன்பதிவு இல்லா சிறப்பு ரயில்கள் இன்று முதல் ரத்து. பராமரிப்பு பணி காரணமாக ஏப்ரல் 1ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.

Special Train

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி. டெல்லியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான். கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அவேஷ் கான்அசத்தல். இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று ராஜஸ்தான் புள்ளி பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது இடம்.

RR vs DC

ஐபிஎல் தொடரில் பெங்களூரு கொல்கத்தா அணிகள் இன்று மோதல். ஐபிஎல் புள்ளி பட்டியலில் முன்னேற இரு அணிகளும் தீவிரம்.

RCB vs KKR

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள sekhmet கேளிக்கை விடுதியில் முதல் தளத்தின் மேற்கூரை இடிந்து விபத்து. மணிப்பூரை சேர்ந்த திருநங்கை உள்ளிட்ட 2 பேர் மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர் கான்கிரீட் இடிபாடுகளுக்கு நடுவே சிக்கி பலி.

Sekhmet Hostel

sekhmet கேளிக்கை விடுதியின் வாசலில்லேயே மெட்ரோ பணிகள் நடந்து வரும் நிலையில் அதிர்வினால் கட்டிடம் பலவீனம் அடைந்ததா என்றும் விசாரணை.

Sekhmet Hostel, CMRL

குரூப் 1 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது TNPSC. 90 பணியிடங்களுக்கு ஜூலை 13ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.

TNPSC Group 1 main exam

தமிழ்நாட்டில் 100நாள் வேலை திட்டம் ஊதியம் ரூ.319 ஆக உயர்வு. நாடுமுழுவதற்கும் ஊதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டது மத்திய அரசு.

100 days worker, Central Govt

முருகனின் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றத்தில் பங்குனி உத்திர கோலாகலம். திருகல்யாண உட்சவத்தில் அருள்பாலித்த சுப்பிராமணி சுவாமி தெய்வானை.

Tiruparangunram Temple

புனித வெள்ளி தினமான இன்று சிபிஐ அலுவலகங்களுக்கு விடுமுறை கிடையாது என அறிவிப்பு. அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் சிபிஐ இயக்குனர் சுற்றறிக்கை.

Good Friday, CBI office

நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள 'கா தி ஃபாரஸ்ட்' திரைப்படத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை. இன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுருந்த நிலையில் அதிரடி உத்தரவு.

Ka - The Forest, Chennai High court

கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு தாக்கலில் குளறுபடி என புகார் எழுந்த நிலையில், களத்தில் எதிர்க்க முடியாத அரசியல் கட்சிகள் வேட்பு மனுவை நிராகரிக்க முயற்சிக்கின்றனர் என்று அண்ணாமலை பதிலடி.

Annamalai

ரமலான் பண்டிகையை முன்னிட்டு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு அட்டவணையில் மாற்றம். ஏப்ரல் 10 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஏப்ரல் 4 மற்றும் 6 தேதிகளில் நடைபெறும் எனவும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு.

School students, Ramzan Fest

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு. பல்கலைகழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் அறிவிப்பு.

Madras University Result

தூத்துக்குடியில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சுழல் நிலவியதால் பொது மக்கள் மகிழ்ச்சி.

Rain

உலகிலேயே வேகமாக இயங்கும் ஜப்பான் ரோலர் கோஸ்டர் நிரந்தரமாக மூடல். சவாரிசெய்த சுற்றுலா பயணிகளில் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் பாதுகாப்பு கருதி நடவடிக்கை.

Japan's world's fastest roller coaster | Image Credit:pinterest
Summer Season Fruits