பாரதி
மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்குப் பிறகுதான் குணா குகை என்ற இடத்தை அனைவரும் தேடி வருகின்றனர்.
குணா குகை 1821ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆஃபிஸர் பி.எஸ்.வார்ட் என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர் வெகுகாலமாக அந்தக் குகையை யாருமே கண்டுக்கொள்ள வில்லை.
மீண்டும் 1990ம் ஆண்டுத்தான் குணா குகையின் இயற்கை அழகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
1992ம் ஆண்டு கமல்ஹாசன் குணா படத்திற்காகக் கொடைக்கானலுக்கு லொக்கேஷன் பார்க்கச் சென்றார்.
அப்போது மக்கள் நடமாட்டம் இல்லாத இடம் வேண்டுமென்று நடந்தே வெகுதூரம் சென்று பார்க்கையில்தான் இந்தக் குகை அவர் கண்ணில் பட்டது. அதன்பின்னரே குணா குகை பிரபல சுற்றுலா தலமாக மாறியது.
அதுவரை The Devil’s Kitchen என்றழைக்கப்பட்ட இந்த குகை குணா படப்பிடிப்பிற்கு பின் குணா குகை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த குகையில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பழையர் பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த குகைக்குள் தீடீர் திடீரென்று புகை அடிக்கடி வெளியே வரும் என்பதால் அங்கு பேய்கள் நடமாட்டம் இருக்கின்றது என்று சிலர் கூறுகின்றனர்.
அப்படிக் கூறுவதற்கு முக்கிய காரணம் 2004ம் ஆண்டு 12 இளைஞர்கள் மர்மமான முறையில் அங்கு இறந்தனர். அதன்பிறகு அந்த குகைத் தடைசெய்யப்பட்டப் பகுதியாக அறிவிக்கப்பட்டது.
அந்த இளைஞர்கள் இறந்ததற்கு காரணம் அந்த பேய்கள் தான் என்று சிலர் கூறுகின்றனர்.
மேலும் சிலர் அந்த குகையிலிருந்து வெளியே வராமல் காணாமல் போனதாக 2016ம் ஆண்டு போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இன்று வரை அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இந்த மர்மங்களை அடிப்படையாகக் கொண்டுத்தான் சிதம்பரம் எஸ். பொதுவால் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை இயக்கியுள்ளார்.
நண்பர்கள் சிலர் குணா குகைக்குள் செல்கின்றனர். அதன்பின்னர் அங்கு என்னென்ன நடக்கிறது என்பதை த்ரில்லர், எமோஷனல் கலந்த ஃப்ரெண்ட்ஷிப்புடன் இயக்குனர் விவரித்துள்ளார்.
இப்படம் மலையாளத்தை விட தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. அதற்கு முதற்காரணம் கொடைக்கானலில் உள்ள இந்த குணா குகைத்தான். அதேபோல் இரண்டாவது காரணம் தமிழில் வெளிவந்த குணா திரைப்படம்.
இப்படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் கமல் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளார்.
மேலும் கார்த்திக் சுப்புராஜ், உதயநிதி ஸ்டாலின், நடிகர் கிஷன் தாஸ், இயக்குனர் ஷாஜி கைலாஷ் போன்ற பிரபலங்களும் படக்குழுவிற்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.