உங்க பாக்கெட்டில் இருக்கும் ரூபாய் நோட்டில் இத்தனை ரகசியங்களா?

நான்சி மலர்

இந்திய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் வெறும் பரிவர்த்தனைக்கானவை மட்டுமல்ல, அவை இந்தியாவின் நீண்ட கால வரலாற்றையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் பல சுவாரசியமான கதைகளைக் கொண்டுள்ளன.

Money facts

1/10. இந்திய நாணயத்திற்கு 'ரூபாய்' என்ற பெயர் ஷெர்ஷா சூரி என்ற மன்னர் 1540-1545 காலகட்டத்தில் வெளியிட்ட 'ரூபியா' (Rupiya) என்ற வெள்ளி நாணயத்தில் இருந்து வந்தது.

Money facts

2/10. இந்திய ரூபாய் நோட்டுகளின் முன்பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் இருக்கும். நோட்டின் பின்பக்கத்தில் உள்ள 'மொழிப் பலகையில்' தமிழ் உட்பட 15 மாநில மொழிகள் அச்சிடப்பட்டிருக்கும்

Money facts

3/10. பார்வையற்றவர்கள் ரூபாய் நோட்டுகளின் மதிப்பைத் தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள வசதியாக, நோட்டுகளின் ஓரங்களில் 'பிளீட் லைன்கள்' (Bleed Lines) எனப்படும் தடித்த கோடுகளும், சிறப்பு வடிவங்களும் பிரெய்லி முறையில் சற்று உப்பலாக அச்சிடப்பட்டிருக்கும்.

Money facts

4/10. இந்திய ரூபாய்க்கான பிரத்யேக குறியீடான ₹ என்பதை 2010ல் வடிவமைத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த டி.உதயகுமார் ஆவார்.

Money facts

5/10. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சட்டம், 1934-ன் படி, இந்தியாவில் அதிகபட்சமாக 10,000 ரூபாய் நோட்டு வரை அச்சடிப்பதற்கான அதிகாரம் உள்ளது.

Money facts

6/10. இந்திய ரூபாய் நோட்டுகள் சாதாரண மரக்கூழில் இருந்து தயாரிக்கப்படும் காகிதம் அல்ல. அவை 100% பருத்தியால் ஆனவை.

Money facts

7/10. 1947-ல் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தான் தங்களுக்கெனத் தனி நாணயங்களை அச்சடிக்கும் வரை, இந்திய ரூபாய் நோட்டுகளையே பயன்படுத்தியது.

Money facts

8/10. இந்தியாவின் ரிசர்வ் வங்கி இந்தியாவிற்கு மட்டுமின்றி, பிற நாடுகளுக்கும் மத்திய வங்கியாகச் செயல்பட்டுப் பணம் அச்சடித்துக் கொடுத்துள்ளது.

Money facts

9/10. இந்திய நாணயச் சட்டம் 2011-ன் படி, நாணயங்களை உருக்குவதோ, அவற்றை அழிப்பதோ அல்லது வேறு பயன்பாட்டிற்காக மாற்றுவதோ மிகப்பெரிய குற்றமாகும்.

Money facts

10/10. உங்களிடம் முற்றிலும் கிழிந்த அல்லது சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால், அவற்றை எந்தவொரு வணிக வங்கியிலும் கொடுத்து புதிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.

Money facts
Potato
உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிட்டால் உடலில் நடக்கும் அற்புதம்!