எஸ்.மாரிமுத்து
உருளைக்கிழங்கு தோலில் வைட்டமின் சி, பொட்டாசியம் சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், தாமிரம், வைட்டமின் பி என பல ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தொற்று நோய்கள் வராமல் தடுக்கும்.
உருளையை தோலுடன் உண்பதால் நார்ச்சத்து உடம்பில் சேருகிறது. மற்ற காய்கறிகளுடன் ஒப்பிடும் போது உருளைக்கிழங்கு குறைவான கலோரிகளை உடையது.
இதனை வறுத்து உண்பதை விட வேக வைத்து உண்பதே நல்லது. வயிற்றுக்கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறு உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதம் ஆகும்.
உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு இருப்பவர்களுக்கும் நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
உருளைக்கிழங்கில் உள்ள மாவு சத்து, அடி வயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சு நீர் தேங்குவதையும், முன்கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது.
உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளதால் ஒல்லியாக இருப்பவர்கள் எடையை அதிகரிப்பதற்கு உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும்.
உருளைக்கிழங்கு தோலில் இருக்கும் பைட்டோ கெமிக்கல் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. மேலும் அவற்றில் குளோரோ ஜெனிக் அமிலங்களும் இருப்பதால் இவை அனைத்தும் உடலை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.
உருளைக்கிழங்கினால் ஏற்படும் வாய்வுத் தொல்லைக்கு அதன் தோலே சரியான மருந்தாகும். தோலுடன் உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை வராது.
பச்சை உருளைக்கிழங்கை அரைத்து எடுத்து பேஸ்ட்டாக்கி தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் பொலிவாகும். மேலும் இது பரு மற்றும் சரும புள்ளிகளை குணப்படுத்துகிறது.
உருளையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தூண்டி மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை வராமல் தடுக்க உதவுகிறது.
உருளைக்கிழங்கு தோளில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடெண்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.
உருளைக்கிழங்கு தோலில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளதால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்து ரத்தசோகை அபாயத்தை குறைக்கும்.
உருளைக்கிழங்கு தோலில் கால்சியம் நிறைந்து இருப்பதால் சமைக்கும் போது தோலுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாகும்.
முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்