பல்லவர்கள் வாழ்ந்த பல்லாவரம்! ஷார்ட் டைம் டிராவல் ட்ரிப் போவோமா?

கண்மணி தங்கராஜ்

பல்லாவரம் பகுதியானது ஆசியாவிலேயே மிகப் பழைமையான பெருமை வாய்ந்த தலங்களில் ஒன்றாகும். மேலும், இது பழங்காலத்திலிருந்தே வளமான சரித்திர வரலாற்றைக் கொண்டுள்ளது.

Pallavaram | Img Credit: Wikipedia

பல்லாவரம் பழங்கால மக்கள் வசித்த இடமாக இருந்ததால், ‘பல்லவபுரம்’ என்று அழைக்கப்பட்டது. ஏனெனில், பல்லவர்களின் குடியிருப்பு உட்பட, நீண்ட வரலாறு இந்தத் தலத்துக்கு உண்டு.

Pallavpuram

1863ல் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ‘ராபர்ட் புரூஸ் ஃபுட்’ கண்டுபிடித்த பழங்கால கல் கருவிகள் உட்பட குறிப்பிடத்தக்க தொல்பொருள் கண்டுபிடிப்புகள் பல்லாவரத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டன.

Robert Bruce Foote | Img Credit: Wikipedia

கலாச்சார பாரம்பரியத்திற்கான வாழ்விடமாக இருக்கும் இந்த இடத்தில் 600 A.D க்கு முந்தைய குகைக் கோயில்களில் காணப்படும் பல்லவ வரலாறுகளின் எச்சங்கள் மற்றும் ஆரம்பகால பல்லவ எழுத்துகள் காணப்படுகின்றன.

Pallavaram | Img Credit: Wikipedia

பல ஆண்டுகளாக அமைதியான சூழலிலிருந்த இந்தப் பகுதியானது, தற்போது உணவகங்கள், கடைகள் மற்றும் பல்வேறு வசதிகளுடன் கூடிய ஒரு பரபரப்பான சுற்றுப்புறமாக மாறியுள்ளது.

Pallavaram | Img Credit: Hindu

‘சந்தை’ என்று அழைக்கப்படும் வெள்ளிக்கிழமை சந்தை, 18ம் நுற்றாண்டிலிருந்தே இப்பகுதியின் ஒரு முக்கிய அம்சமாக இயங்கி வருவதாக கூறப்படுகிறது. தற்போது, இது அங்கு வரக்கூடிய விற்பனையாளர்களையும் பார்வையாளர்களையும் வெகுவாக தன்வசம் ஈர்க்கிறது.

Pallavaram friday market |

பல்லாவரத்தில் 1980களில் ‘ஜிஎஸ்டி சாலை’ நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகள் அதிலும் குறிப்பாக ரியல் எஸ்டேட் துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது.

Pallavaram GST road | Img Credit: Flickr

பல்லாவரம் ஒருகாலத்தில் அரை டஜன் நீர்நிலைகளைக் கொண்டிருந்தது. ஆனால், பல ஆக்கிரமிப்புகள் மற்றும் நகரமயமாக்கல் காரணமாக சில நீர்நிலைகளை தற்போது காணாமல் போயுள்ளது.

Pallavaram | Img Credit: Realtynxt

பல்லாவரத்தில் நிலத்தடி வடிகால், எம்ஐடி பாலம், பாலாறு குடிநீர் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்துமே குடியிருப்பாளர்களின் ஒருங்கிணைந்த முயற்சிக்குப் பிறகே நிறுவப்பட்டுள்ளன.

Pallavaram | Img Credit: Facts

பல்லாவரம் பகுதி சாலை மற்றும் இரயில் சேவை நெட்வொர்க்குகள் மூலம் நன்கு பராமரிக்கப்படுகிறது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எளிதாக இந்தப் பகுதியை அணுகலாம்.

Pallavaram | Img Credit: India rail info

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் பல்லாவரம் பகுதி அமைந்துள்ளதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதியான பயணத்தை எளிதாக்குகிறது.

Pallavaram | Img Credit: Wikipedia

நகைகள், ஜவுளிகள் மற்றும் மரவேலைகள் உள்ளிட்ட நுணுக்கமான கைவினைப்பொருட்களை உருவாக்கும் திறமையான கைவினைஞர்கள் இப்பகுதியை சூழ்ந்து இருக்கின்றனர்.

Jewellery | Img Credit: ET retail

பார்வையாளர்களைக் கவரும் கைவினைப்பொருட்கள் பல்லாவரத்தின் வளமான கைவினைத்திறன் மற்றும் பிரபலமான கலைத் திறன்களை வெளிப்படுத்துகின்றன.

Handicrafts | Img Credit: The statesman

பல்லாவரம் நீண்ட கால பட்டு நெசவு செய்யும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இங்கு திறமையான நெசவாளர்கள் அழகான பட்டுப் புடைவைகளை அவர்களின் கைவினைத்திறனால் மிகவும் நேர்த்தியாக உருவாக்கி வருகின்றனர்.

Silk sarees

பல்லாவரம் பகுதியில் உள்ள தெருக்கள் சுவையான உணவுக் கடைகளால் நிரம்பியுள்ளன. இங்கு பல்வேறு வகையான தெரு உணவுகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Street food

இந்த நகரம் மிகவும் பழைமையான கோயில்களுக்கு மட்டுமல்ல, நேர்த்தியான தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்கும் புகழ் பெற்றது. அந்தந்த மதக் கட்டமைப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு பல்லவரம் நகரத்துக்கு கூடுதல் அழகு சேர்கிறது!

Pallavaram
surukkupai seithigal