சுருக்குப்பை செய்திகள் (30.03.2024)

கல்கி டெஸ்க்

தமிழகத்தில் 39தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் இன்று மாலை வெளியாகிறது. வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற பிற்பகல் வரை அவகாசம்.

File Nomination

ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி அனைத்து விதமான தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியிட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு.

Election Poll, Election Commision

வேட்டையாடு விளையாடு, பைரவ, பிகில் படங்களில் நடித்த டேனியல் பாலாஜி காலமானார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவரின் தீடீர் மரணத்தால் திரைவுலகினர் அதிர்ச்சி. மாரடைப்பால் உயிரியிழந்த டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டன.q

Daniel Balaji

பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு இருந்த இருவரின் புகைப்படங்கள் வெளியீடு. தகவல் தெரிவிப்போருக்கு 10லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப் படும் என NIA அறிவிப்பு.

Acquist

முகநூல் பயனர்களின் ரகசிய தகவல்களை Netflix இல் பகிர்ந்த meta. நீதி மன்ற அவங்கங்கள் மூலம் Facebook, Netflix உறவு அம்பலம்.

Netflix,FB

ஐபிஎல் தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா அணி. பெங்களூருவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கனவில் கூட பெங்களூர் அணியை தோற்கடிக்க வேண்டும் என்பதே விருப்பம் என கௌதம் கேம்பர் அவேசம்.

KKR

ஐபிஎல் தொடரில் 11வது லீக் போட்டியில் லக்னோ பஞ்சாப் அணிகள் இன்று மோதல். லக்னோ ஏகானா மைதானத்தில் இன்று 7.30 மணிக்கு போட்டி நடைபெறவுள்ளது.

PBKS vs LSG

மியாமி ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி போட்டி மெட்பாதேவை வீழ்த்தி ஜானிக் சின்னர் இறுதி போட்டிக்கு தகுதி.

Jannik Sinner

கணவரை இழந்த பெண்ணிற்கு ஆட்டோ பரிசளித்த நடிகர் பாலா. ராகவ லாரன்ஸ் உதவியுடன் புதிய ஆட்டோ வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சி.

KPY Bala, Raghava Lawernce

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு கோடைக்கால சிறப்பு மலை ரயில் போக்குவரத்து இயக்கம். ஜூலை 1ஆம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயற்றுகிழமைகளில் இயக்கப்படும் என அறிவிப்பு.

Special Train

கொல்லிமலையில் பற்றி எரியும் காட்டு தீயால் அரியவகை மூலிகை மரங்கள் சேதம். வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு நேரில் ஆய்வு.

Kollimalai Forest Fire, Supriya Saho

தமிழகத்தின் 8 இடங்களில் 100 டிகிரி ஃபர்ஹன் ஹீட் தாண்டிய வெப்பம். அதிகப்பட்சமாக ஈரோட்டில் 104 டிகிரி ஃபர்ஹன் ஹீட் பதிவு.

Summer heat

வருகிற ஏப்ரல் 8ஆம் தேதி வானில் நிகழும் முழுசூரிய கிரணம். சந்திரனின் நிலை ஆராய 3 ராக்கெட்களை விண்ணில் செலுத்த நாசா விஞ்ஞானிகள் முடிவு.

solar eclipse, NASA

S.J அர்ஜுன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, அசோக் செல்வன்,சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ள 'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் நேற்று வெளியீடு.

Soodhu Kavvum2

நயன்தாரா தான் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று முன்னணியில் இருந்து வந்த நிலையில் த்ரிஷா கமலின் தக் லைப் படத்திற்காக 12 கோடி ரூபாய் சம்பளம் பெருகிறாராம். இதன் மூலமாக நடிகை நயன்தாராவை ஓரங்கட்டி தென்னிந்தியாவில் டாப் ஹீரோயின் என்ற இடத்தை பிடித்து இருக்கிறார்.

Trisha, Nayanthara
Saudi Arabia | Img Credit: Expedia