தமிழரின் ஓவியக்கலை வரலாற்றை சுமந்து நிற்கும் சித்தன்னவாசல்!

கண்மணி தங்கராஜ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சித்தன்னவாசல் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. புதுக்கோட்டையிலிருந்து அன்னவாசல் செல்லும் சாலையில் ஏறத்தாழ 17 கி.மீ. தொலைவில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

Sittanavasal | Image Credit: Wikimedia Commons

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் குகை ஓவியங்கள் மற்றும் சமணர் படுக்கைகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

Sittanavasal | Image Credit: Wikipedia

இந்த இடத்தின் பெயரானது சித்தன்னவாயில் என்பது காலப்போக்கில் மருவி, சித்தன்னவாசலாகிவிட்டது.

Sittanavasal

தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.

Sittanavasal

தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள சித்தன்னவாசல், தமிழகத்தின் மிகமுக்கிய கலைப்பொக்கிஷ தலங்களில் ஒன்றாகும்.

Sittanavasal | Img Credit: Map academy

தமிழா்களின் கலை பண்பாட்டினை பறைசாற்றும் உயிரோட்டமுள்ள ஓவியங்கள் இந்த சித்தன்னவாசலின் அடையாளமாகத் திகழ்கின்றன.

Sittanavasal | Img Credit: Flickr

சித்தன்னவாசல் ஓவியங்கள் 7ம் நூற்றாண்டில் (கி.பி.600 - 630) பல்லவ மன்னான மகேந்திரவர்மனால் வரையப்பட்டவை என்று கூறப்படுகிறது. அவர் ‘சித்திரகாரப் புலி’ என்ற அடைமொழியையும் பெற்றிருக்கிறார்.

Sittanavasal | Img Credit: Flickr

இங்கு  காணப்படும் ஓவியங்கள் அனைத்தும் அஜந்தா ஓவியங்களைப் போன்று தனித்துவமானவை என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Sittanavasal | Img Credit: Flickr

மூலிகைகளினால் வரையப்பட்ட  ஓவியங்கள் நிறைந்து காணப்படும் இப்பகுதி ‘தென்னிந்தியாவின் அஜந்தா குகை' என்று போற்றப்படுகிறது.

Sittanavasal

ஓவியத்தில் நடன மங்கைகள், பறவைகள், மீன்கள், எருமைகள், யானை என பலவும் அழகாகவும், உயிரோட்டமுடையதாகவும்  வரையப்பட்டுள்ளன.

Sittanavasal | Img Credit: Flickr

இங்கு நான்கு வகையான ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றிற்கும் பிரிப்புப்பட்டை ஓவியம், புள்ளி ஓவியம், கோண ஓவியம், சக்கர ஓவியம் என ஆய்வாளர்கள் பெயரிட்டிருக்கிறார்கள்.

Sittanavasal

ஓவியக்கலையின் உன்னதத்தை உலகிற்கு பறைசாற்றும் சித்தன்னவாசல் ஓவியங்களை சமணர்கள், மூலிகைகள் கொண்டு  தயாரிக்கப்பட்ட வர்ணங்களைக் வைத்து வரைந்துள்ளனர்.

Sittanavasal | Img Credit: Insights ias

சித்தன்னவாசலில், சின்னச் சின்ன குன்றுகள் உள்ளன. சுமார் 70 மீட்டர் உயரம் கொண்ட இந்த குன்றுகளின் மேல் சமணர்களின் படுகையும், தவம் செய்யும் இடமும் மற்றும் பல இடங்களில் குடைவறைகளும் காணப்படுகின்றன.

Sittanavasal | Img Credit: Wikipedia

சித்தன்னவாசலில் சிறிய மற்றும் பெரிய அளவிலான பாறைகள் நிறைந்திருக்கின்றன. அந்த இடங்கள் சமண முனிவர்கள் தவம் செய்த இடமாக அறியப்பட்டுவருகின்றன.

Sittanavasal | Img credit: Justdial

இந்த சித்தன்னவாசலை சுற்றி குடுமியான்மலை, நார்த்தாமலை உள்ளிட்ட சிறப்புமிக்க கோயில்களும், தேவாலயம் மற்றும் பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களும் இருக்கின்றன.

Sittanavasal
Guna Cave | Image Credit : Sterling Holidays
மஞ்சும்மல் பாய்ஸின் குணா குகை ரகசியங்கள்!