வாசுதேவன்
தபால் தலைகள் அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தவர் ஸர் ரோவ்லாந்து ஹில். இங்கிலாந்தில் முதல் தபால் தலை மே 6, 1840 ல் வெளியிடப்பட்டது.
ஆசியாவில் முதன் முதலில் தபால் தலையை அறிமுகப்படுத்திய பெருமை நமது நாடு இந்தியாவை சாரும்.
முதன் முதலில் தபால் தலை பென்னி ப்ளாக் என்று அறியப்பட்டது.
ஐக்கிய சபை (United Nations) தேசம் அல்ல. இருந்தும் தபால் தலைகள் வெளியிடுகின்றன.
ஒரு சென்ட் பிரிட்டிஷ் கினியா தபால் தலை மிகவும் அரிய தபால் தலையாக கருதப்படுகின்றது.
விளையாட்டு சம்பந்தமாக முதன் முதலில் 1896 ல் ஒலிம்பிக்ஸ் பற்றிய தபால் தலை கிரீஸ் வெளியிட்டது.
1948 ல் வெளியான மகாத்மா காந்தி உருவம் கொண்ட தபால் தலையில் SERVICE என்ற சொல் இரண்டு முறை ஒன்றுக்கு மேல் ஒன்றாக சரிவர பிரிண்ட் ஆகாத காரணத்தால் அரிய தபால் தலையாக கருதப்படுகின்றது.
முன்னாள் பிரதமர் லால் பகதூர் உருவம் பதித்த தபால் தலையை ஹுங்கேரி வெளியிட்டது.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பிரங்களின் டி ரூஸ்வெல்ட் மிகவும் விரும்பி தபால் தலைகளை சேகரித்து வந்தார்.
ரஷிய நாட்டின் புகழ் பெற்ற லெனின் சிறு வயது உருவம் பதித்த தபால் தலை வெளியானதுண்டு.
அரச குடும்பத்தினருக்காக ராயல் கலெக்க்ஷன் (Royal Collection) உருவாக்கியவர் ஐந்தாம் ஜார்ஜ் அரசராவார்.
அயல் நாட்டு தபால் தலையில் முதன் முதலில் இந்தியர் உருவம் பதிக்கப்பட்டது மகாத்மா காந்திக்கு தான்.