வாசுதேவன்
ஹங்கேரியின் தலைநகரம் புடாபெஸ்ட். இந்த நாட்டின் தேசிய மொழி ஹங்கேரியன். பரப்பளவு 93030 சதுர கிலோ மீட்டர்கள்.
முக்கியமான மலை தொடர்கள் வடக்கு ஹங்ககேரியன், டிரான்ஸ்டானுபியன்.
பாலாட்டன் ஏரி ஐரோப்பாவில் மிக பெரிதான ஏரி . ஹெவிஸ் மிக பெரிய வெப்ப ஏரி ஆகும்.
ஹங்கேரிக்கு வருடந்தோறும் அதிக எண்ணிக்கையில் சுற்றுப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு புரதான உலக பாரம்பரிய தளங்கள் இருக்கின்றன. ( World Heritage Sites ). இங்கு போக்குவரத்திற்கு ரயில், பஸ், கார், படகு, விமானம் போன்றவைகள் உபயோகத்தில் உள்ளன.
இது ஐரோப்பாவில் நடுவில் இருக்கின்றது. வட பகுதியில் ஸ்லோவாக்கிய மற்றும் ஆஸ்திரியாவும், கிழக்கில் உக்ரேன் மற்றும் ரோமனியாவும், மேற்கில் ஸ்லோவினியாவும், தெற்கில் க்ரோஷியா மற்றும் செர்பியா அரணாக சூழப்பட்டுள்ளது.
தேசத்தின் நடுவில் பாயும் டான்யுபே நதி சுமார் மொத்தமாக 2900 கிலோ மீட்டர் தூரம் பாயந்து கருங் கடலில் கலக்கின்றது. 10 தேசங்கள் வழியாக இந்த நதி செல்கின்றது.
ஹங்கேரி பல வகை உயிரினங்களுக்கு இருப்பிடமாக திகழ்கின்றது. ரோ மான் என்ற ஐரோபிய வகை மான் இனம், காட்டு பன்றிகள், செந்நிற நரிகள், மலைக் கறாடு , இம்பீரியல் கழுகு.
இங்கு மிகபெரிய வகை தேசிய பூங்காக்கள் 10 க்கும் அதிகமாக உள்ளன.
இரண்டாவது உலக போர் முடிவில் கம்யூனிஸ்ட் நாடாக இருந்த ஹங்கேரி 1990ல் குடியரசு நாடாக மாறியது. 2004 ல் யூரோபியன் யூனியனில் ஒரு அங்கமாக ஆயிற்று.
ஆல்ப்ஸ் மற்றும் கார்ப்பதியன்ஸ் மலை தொடர்கள் சூழப் பெற்றுள்ளதால் சீதோஷன நிலை கட்டுக்குள் உள்ளது.
இங்கு பாக்சைட், நிலக்கரி, இயற்கை எரிவாயு கிடைக்கின்றன மற்றும் விவசாய விளை நிலங்கள் உள்ளன.
ஹங்கேரி விஞ்ஞானம், கலை, கல்வி இவைகளில் சிறந்து விளங்குகின்றது.