பவானிசாகர் அணை நமது பாரம்பரியப் பெருமை!

பொ.பாலாஜிகணேஷ்

இந்தியாவில் புகழ் பெற்ற அணைகளில் ஒன்றான பவானி சாகர் அணை தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய அணையாகும். இந்த அணையானது பல சிறப்புக்களை உள்ளடக்கியது.

கோயம்பத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளயம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆற்றுடன், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தின் கீழ் பவானி திட்டம் அணை கட்டப்பட்டுள்ளது.

Bhavani saagar Dam

இவ்வணையின் சிறப்புகள் தமிழகத்தில் இரண்டாவது பெரிய அணை பவானி சாகர் அணை. ஆசியாவில் மிக நீளமான அணையும் மண்ணால் ஆன அணையும் பவானி சாகர் அணையாகும்.

Bhavani saagar Dam

இவ்வணையின் மூலம் ஈரோட்டில் உள்ள அனைத்து விவசாய நிலங்களுக்கும் நீர் பிரித்து வழங்கப்படுகின்றது. பவானி சாகர் அணையின் வாய்க்கால் மூலமாக 2.7 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறுகின்றன.

Bhavani Saagar Dam | Imge Credit: Tamilnadu tourism

இதனால் உண்டான நீர்த்தேக்கத்திற்கு பவானி சாகர் நீர்த்தேக்கம் என்று பெயர் வந்தது. பவானி சாகர் அணையின் கொள்ளளவு 32.8 டி.எம்.சி ஆகும். 

Bhavani saagar Dam | Imge Credit: Tamilnadu Tourism

1948 ஆம் ஆண்டு கட்ட தொடங்கப்பட்ட இவ்வணையானது, 1955 இல் நிறைவு செய்யப்பட்டது. இவ்வணையை கட்டுவதற்கு அப்போது 10 கோடி 50 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டது.

Bhavani saagar Dam | Imge Credit: DTNext

இவ்வணையை 20 கிராம மக்கள் ஒன்றிணைந்தே கட்டி முடித்துள்ளனர். இவ்வணையானது சுமார் 7 வருடங்களில் கட்டி முடிக்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி இவ்வணை திறக்கப்பட்டது.

Bhavani saagar Dam | Imge Credit: Tripuntold

இவ்வணையானது முழுமையாக மண்ணினாலேயே கட்டப்பட்டது. இவ்வணையின் முழுக்கொள்ளளவு 120 அடி. ஆனால் சேறும், சகதியும் கழித்து 105 அடியாக கணக்கில் எடுக்கப்படுகின்றது.

Bhavani saagar Dam | Imge Credit: Tripuntold

இவ்வணையின் மூலம் ஈரோட்டில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் பிரித்து வழங்கப்படுகின்றது. பவானி சாகர் அணையின் வாய்க்கால் மூலமாக 2.7 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறுகின்றன.

Bhavani saagar Dam

இவ்வணையின் நடுவே இரு அணைகள் கட்டப்பட்டு நீர் பிரித்து விவசாயத்திற்கு அனுப்பப்படுகின்றது. அந்த அணைகளானவை, பொடிவேரி அணை, காளிவீராயன் அணை என்பனவாகும். இதில் பொடிவேரியன் அணை மூலம் 2500 ஏக்கர் நிலங்களுக்கும், காளிவீராயன் அணை மூலம் 1500 ஏக்கர் நிலங்களுக்கும் நீர் வழங்கப்படுகின்றது.

Bhavani saagar Dam

இவ்வணையின் அருகே இரண்டு மின்நிலையங்கள் காணப்படுகின்றன. 1956 ஆம் ஆண்டு முழுக் கொள்ளளவு நீர் நிரம்பியது. அதன் பின் 12 வருடங்கள் சென்ற பின்பே முழுமையான நீர் மீண்டும் நிரம்பியது.

Bhavani saagar Dam

ஹொய்சாளர் ஆட்சி காலத்தில் படைத்தளபதி பெருமாள் தண்டநாயக்கனைப் பாராட்டி வழங்கப்பட்ட குறுநிலத்தில், ஆற்று சமவெளியில் கி.பி. 1254 ஆம் ஆண்டு இந்தக் கோட்டையைக் கட்டி ஆண்டான்.

Bhavani saagar Dam

இக்கோட்டையானது இவ்வணையின் நீரினுள் மூழ்கி காணப்படுகின்றது. நீரின் அளவு குறைந்த பின்பே வெளித்தெரியும்.

Bhavani saagar Dam | Imge Credit: Hindhu

நீரில் மூழ்கி இருந்தாலும் இக்கோட்டையில் எந்தவொரு சேதமும் வரவில்லை என்பது சிறப்பு.

Bhavani saagar Dam | Imge Credit: Onmanorama
Nabigal Naayagam | Imge Credit: pinterest