கண்மணி தங்கராஜ்
உலகத்துக்கு முன்பாகவே பல விஷயங்களை சீனர்கள் கண்டுபிடித்து விட்டனர். இதில் மிகப் பிரபலமானது காகிதம். அது மட்டுமின்றி, காகித நாணயம், வெடி மருந்து, காம்பஸ், பட்டு உள்ளிட்டவை சீனர்களால்தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
இரண்டாம் நூற்றாண்டிலேயே, சீனர்கள்தான் மனித உடலில் உள்ள மொத்த இரத்தத்தையும் இதயம் தான் பம்ப் செய்கிறது என்பதை முதலில் கண்டுபிடித்தனர்.
சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 144 கோடி பேர் அதிவேக இரயில்களில் பயணிக்கின்றனர். அதிலும், குறிப்பாக உலகின் மிக வேகமான ரயிலான ‘ஷாங்காய் மாக்லேவ்’ என்பது மணிக்கு 302 மைல்கள் வேகத்தில் பயணிக்கிறது.
சீனாவில் தினமும் சராசரியாக 274 போராட்டங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஆனால், சீன ஊடகங்களை அந்நாட்டு அரசு கடுமையாக தணிக்கை செய்வதால் பெரும்பாலான போராட்டங்கள் குறித்த செய்திகள் வெளியே தெரிய வருவதில்லை.
சீனர்கள் சூப் குடிக்க / உணவு உண்ண சாப்ஸ்டிக்ஸ் பயன்படுத்துவது வழக்கம்தான். அந்த வகையில் சீன மக்கள் ஒரு வருடத்திற்கு 45 பில்லியன் சாப்ஸ்டிக்ஸ் உபயோகிப்பதாகக் கூறப்படுகிறது.
இன்றளவிலும் சீனாவில் 3.5 கோடி மக்கள் குகைகளில்தான் வாழ்ந்து வருவதாக ஆய்வறிக்கைகள் மூலம் அறியப்படுகின்றன.
மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில், குழந்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் அதற்கு முன் அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று ஒரு சட்டமே இருக்கிறது.
சீனாவில், ‘ஒற்றை குழந்தை சட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும், மீறினால் அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும். பிறகு அந்தக் குழந்தை கருவிலேயே கலைக்கப்படும்.
சீனாவின் ஒற்றை குழந்தை முறையின் காரணத்தால், ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் பெண் சிசுக்கள் கருக்கலைப்பு செய்யப்படுகின்றன. மேலும், ஆயிரக்கணக்கான பெண் குழந்தைகள் தனித்து அனாதையாக விடப்படுகின்றனர்.
china apps சீனாவில் Google, facebook, youtube போன்ற பிரபல நிறுவனங்களின் செயலிகளுக்குத் தடை. இதற்கு பதிலாக சீனாவில் உருவாக்கப்பட்ட செயலிகளையே மக்கள் பயன்படுத்துகின்றனர்.
சீனாவில் ஒருசில கணக்கெடுப்புகளின் அடிப்படையில் பார்க்கும்போது, 2020ல் மட்டுமே 4 கோடி ஆண்களுக்கு திருமணம் செய்துகொள்ள பெண் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் 40 லட்சம் பூனைகள் உண்ணுவதற்காக கொல்லப்படுகின்றன.
சீனாவில் திருமணமாகாத பெண்கள் தங்களது கன்னித்தன்மையை இழந்துவிட்டால், அதனை மீண்டும் அவர்களால் பெற முடியும். சீன பெண்கள் தங்களது கன்னித்தன்மையை மீண்டும் பெற $700 வரை செலவழித்து பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பெறுகிறார்கள்.