விலா எலும்புகளைப் போல் செதுக்கப்பட்டுள்ள பாறைகள்-எங்கே உள்ளன தெரியுமா?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அவுரங்காபாத்தின் வடமேற்கில் அமைந்துள்ள எல்லோரா குகைகள் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.

Ellora Caves | Imge Credit: Pinterest

ஒரே பாறையைக் குடைந்து கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற குகைகோயில்கள் இவை.

Ellora Caves | Imge Credit: Pinterest

பொதுவாக எல்லோரா என்றாலே கைலாசநாதர் கோயிலைப் பற்றித்தான் அதிகம் பேசப்படும். ஆனால், அங்குள்ள பௌத்த, சமண குகை கோயில்களும் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

Ellora Caves | Imge Credit: Pinterest

எல்லோரா குகைகள் 8ஆம் நூற்றாண்டில் ராஷ்டிரகூட வம்ச மன்னர் கிருஷ்ணா என்பவரால் கட்டப்பட்டவை. கைலாசநாதர் கோயில் செங்குத்தான பெரியமலையை உச்சியிலிருந்து குடைந்து உருவாக்கப்பட்டது.

Ellora Caves | Imge Credit: Pinterest

பிரம்மாண்டமான புத்தர்சிலையும், பெரிய போதிமரமும், துறவிகளின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ள புத்தகுகைகள் மிகவும் சிறப்பானவை.

Ellora Caves | Imge Credit: Pinterest

34 குடைவரை கோயில்களில் 1 முதல் 12 வரை புத்த குகைகள் உள்ளன. ஐந்து சமண குகைகளும் உள்ளன. 

Ellora Caves | Imge Credit: Pinterest

பௌத்தகுகைகள் 11 மற்றும் 12, ஒருபாறையில் வெட்டப்பட்ட மூன்று அடுக்கு பௌத்த மடங்களாகும். இவை 600-730 CE இடையே  கட்டப்பட்டவை.

Ellora Caves | Imge Credit: Pinterest

மடாலய குகைகளில் கௌதமபுத்தர், போதி சத்துவர்கள் மற்றும் துறவிகளின் சிற்பங்கள் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.

Ellora Caves | Imge Credit: Pinterest

பௌத்தகுகை 10 – சைத்யா மண்டபம். இதன் மேற்குபகுதியில் ஒரு ஸ்தூபி உள்ளது. இங்கு வியாக்யான முத்திரையில் அதாவது கற்பிக்கும் தோரணையில் ஒரு பிரம்மாண்டமான புத்தர்சிலை செதுக்கப்பட்டுள்ளது. 

Ellora Caves | Imge Credit: Pinterest

இவரது பின்புறத்தில் ஒருபெரிய போதிமரம் செதுக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் கூரையில் விலா எலும்புகளைப் போல் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. 

Ellora Caves | Imge Credit: Pinterest

தூண்களுக்கு மேல் நாகாரணிகள், நடனக்கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் செதுக்கப்பட்டுள்ளனர். 

Ellora Caves | Imge Credit: Pinterest

பௌத்த குகைகளில் குகை எண் 10 (விஸ்வகர்மாஅல்லது தச்சர்குகை), குகை 11 மற்றும் குகை 12 (மூன்று மாடி மடாலயம்) ஆகியவை மிகப்பெரியவை. இவை மூன்றும் முக்கியமான பௌத்த குகைகளாகும். 

Ellora Caves | Imge Credit: Pinterest

இந்தக் குகைகள் பௌத்தத்தின் வஜ்ராயன வடிவத்தின் வளர்ச்சியையும், பல பௌத்த தெய்வங்களையும் குறிக்கின்றன.

Ellora Caves | Imge Credit: Pinterest

சமண குகைகளில் 30 - 34 நேர்த்தியாக செதுக்கப்பட்ட நுட்பமான சிற்பங்கள் உள்ளன.

Ellora Caves | Imge Credit: Pinterest

எல்லோரா குகைகள் மூன்று பெரிய மதங்களுக்கு அதாவது புத்தமதம், இந்து மதம் மற்றும் சமண மதத்தின் சகிப்புத்தன்மையின் உணர்வைப் பிரதிபலிக்கும் விதத்தில் அமைந்துள்ளன.

Ellora Caves | Imge Credit: Pinterest

சுல்தான்கள் கோயிலை அழிக்க பல முயற்சிகள் செய்தும் அவர்களால் சிலைகளின் சிறுபாகங்களை மட்டும்தான் உடைக்கமுடிந்தது.

Ellora Caves | Imge Credit: Pinterest

இந்தக் கோயில்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் ஒன்றாக உள்ளது. ‌‌

Ellora Caves | Imge Credit: Pinterest
Suresh Gopi