நான்சி மலர்
கடல் கன்னி என்பது பாதி மனித உடலும், பாதி மீன் உடலும் கொண்ட ஒரு அரிதான பெண் உயிரினமாகும். கடல் கன்னிகளைப் பற்றிய கதைகள் பண்டைய அஸ்ஸிரியா (கி.மு. 1000) வரையிலான மிகப் பழமையான வரலாற்றைக் கொண்டிருக்கின்றன.
நாட்டுப்புர கதைகளில் சொல்லப்பட்டிருக்கும் கடல் கன்னிகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார்கள். இந்த உயிரினத்தில் ஆண்களும் உண்டு. அவற்றை Merman என்று கூறுவார்கள். Merman கடல் கன்னிகளை போல அழகாக இல்லாமல் பார்ப்பதற்கு அசுரர்கள் போல இருப்பார்கள்
கடற்கன்னிகள் பற்றிய கதைகள் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களில் காணப்படுகின்றன. ஐரோப்பா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் புராணக்கதைகளில் காணப்படுகின்றன.
ராமாயணத்தில் கடல் கன்னியை பற்றிய குறிப்புகள் இருக்கிறது. ராவணனின் மகளான சுவர்ணமஸ்யா (Swarna masya) என்னும் கடல் கன்னி ஹனுமனை பாலம் கட்ட விடாமல் தடுத்ததாக சொல்லப்படுகிறது.
கொலம்பஸ் தன்னுடைய கடல் பயணத்தின் போது கடல் கன்னிகளை பார்த்ததாக கூறியிருக்கிறார். ஆனால், அவர் பார்த்தது Manatees என்னும் பாலூட்டி உயிரினமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்களால் நம்பப்படுகிறது.
'மெர்மெய்டிங்' (Mermaiding) என்ற பொழுதுபோக்கு, கலை வடிவம் அல்லது தொழில்முறையாக கூட மீன் வால் உடைய ஆடை அணிந்து நீச்சல் செய்கின்றனர்.
கடல் கன்னிகளை பற்றி ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் "தி லிட்டில் மெர்மெய்ட்" (The Little Mermaid) என்ற கதை மிகவும் பிரபலம் ஆகும்.
கடல் கன்னிகள் கெட்ட சகுனமாக கருதப்படுகின்றன. இதை பெரும்பாலும் பார்க்கும் போது புயல், சுனாமி போன்ற கெட்ட விஷயங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.
கடற்கன்னிகள் இசையை விரும்புவார்கள் என்றும் இவர்கள் மந்திரம் மற்றும் தீர்க்கதரிசன சக்தியை கொண்டிருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. கடற்கன்னியை பார்ப்பதை சிலர் நல்ல சகுனமாகவும், சிலர் கெட்ட சகுனமாகவும் கருதுகிறார்கள்.
அறிவியல் ரீதியாக, கடல் கன்னிகள் உண்மையில் இருப்பதாக இதுவரை எந்த நிரூபிக்கப்பட்ட ஆதாரமும் இல்லை. கடல் கன்னிகள் என்பவை கற்பனையில் மட்டுமே இருக்கும் ஒரு அழகான மற்றும் மர்மமான உயிரினமாகும்.