கிரி கணபதி
நம்ம எல்லாரும் ஆரோக்கியமா இருக்கணும்னு காய்கறிகளை வாங்கி சமைக்கிறோம். ஆனா, ஒரு பெரிய கேள்வி என்னன்னா, "இந்த காய்கறிகளை தண்ணில போட்டு கொதிக்க வைக்கணுமா, இல்லன்னா ஆவியில வேக வைக்கணுமா?
1. தண்ணில போட்டு கொதிக்க வைக்கும்போது, வைட்டமின் சி மற்றும் பி போன்ற தண்ணீரில கரையுற சத்துக்கள் பாதியோட பாதியா அந்த தண்ணிலேயே கலந்து வேஸ்ட்டா போயிடும். ஆனா, ஆவியில் வேக வைக்கும்போது சத்துக்கள் உள்ளேயே நிலைச்சு இருக்கும்.
2. ஆவியில் வேக வைக்கும்போது காய்கறிகள் அதோட இயற்கையான சுவையையும், நறுமணத்தையும் இழக்காது. கொதிக்க வைத்தால், சுவை லேசா தண்ணியாட்டம் மாறிடும்.
3. கொதிக்க வைக்கும்போது சில காய்கறிகள் (குறிப்பா ப்ரோக்கோலி, பீன்ஸ்) ரொம்பவே மெத்து மெத்துன்னு மாறிடும். ஆனா, ஆவியில் வேக வைத்தால், காய்கறிகள் லேசா மொறுமொறுன்னு இருக்கும்.
4. கொதிக்க வைப்பது வேகமா முடியற மாதிரி தோணலாம். ஆனா, காய்கறியை பொறுத்துதான் இருக்கு. சுடு தண்ணில போட்டவுடனே வேகுறதுனால டைம் கம்மியா இருக்கும்.
5. ஆவியில் வேக வைக்கும்போது எண்ணெய் (Oil) அல்லது கொழுப்பு எதுவுமே தேவையில்லை. காய்கறியோட சத்து அப்படியே உடலுக்கு கிடைக்கும். கொதிக்க வச்சுட்டு அப்புறம் தாளிக்கும்போது எண்ணெய் தேவைப்படும்.
6. சில ஆய்வு முடிவுகள், ஆவியில் சமைக்கும்போது, காய்கறிகள்ல இருக்குற புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்சிடன்ட்கள் (Antioxidants) ரொம்ப சேதமடையாமல் பாதுகாக்கப்படுகிறதுன்னு சொல்லுது.
7. காய்கறிகளை வேக வச்ச அப்புறம் அந்த சத்தான தண்ணியை நாம கீழ ஊத்திட்டா, அரைவாசி சத்துக்களும் வேஸ்ட்டா போயிடும். ஆனா ஆவியில் சமைக்கும்போது அந்தப் பிரச்சனையே இல்லை.
8. ஆவியில் சமைக்கிற முறைதான் பெஸ்ட்னாலும், அதுக்கு தனியா ஒரு ஸ்டீமர் பாஸ்கெட் இல்லன்னா இட்லிப் பானை மாதிரி ஏதாவது தேவைப்படும். ஆனா, கொதிக்க வைக்கிறதுக்கு ஒரு பாத்திரம் போதும்.
9. சின்னதா நறுக்கின காய்கறிகளை கொதிக்க வைத்தால் ரொம்ப சீக்கிரம் கரைஞ்சு, சத்துக்கள் மொத்தமா போயிடும். ஆவியில் வேக வைக்கும்போது, காய்கறிகளை கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்குவது பெஸ்ட்.
10. பொதுவா, சத்துக்களை அதிகமா தக்க வைக்கணும், சுவையும் குறையக் கூடாதுன்னா, ஆவியில் வேக வைப்பது (Steaming) தான் காய்கறிகளை சமைப்பதற்கான சிறந்த மற்றும் ஆரோக்கியமான வழி.
இனிமேல், நீங்க சமைக்கும்போது இந்த ரெண்டு விஷயங்களை நல்லா யோசிச்சு முடிவு எடுங்க.