தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகள்: விஞ்ஞானத்தை மிஞ்சும் சாகசங்கள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகள் (Tamil folk arts), நாட்டுப்புற ஆட்டங்கள், வீர விளையாட்டுகள் மற்றும் வழிபாட்டு மரபுகளின் ஒரு பகுதியாக திகழ்கின்றன.

Temple

சிலம்பம் - தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையாகும். கம்புகளைக் கொண்டு ஆடப்படும் வீர விளையாட்டு இது. இதை 'கம்பு சுற்றுதல்' என்றும் அழைப்பார்கள். இது உடல் வலிமை, மனவலிமை மற்றும் தற்காப்பு திறன்களை வளர்க்க உதவுகிறது.

Silambam

கரகாட்டம் - தலைக்கு மேல் கரகம் ஏந்தி ஆடப்படும் ஆட்டம். அலங்கரிக்கப்பட்ட செம்பு அல்லது பித்தளைப் பானையை தலையில் வைத்துக்கொண்டு, நையாண்டி மேளத்தின் இசைக்கு ஏற்ப ஆடுபவர்கள் குடம் கீழே விழாமல் நடனம் ஆடுவார்கள்.

Karagattam

கும்மி - பெண்கள் குழுவாகச் சேர்ந்து வட்டமாக கைகளைக் கொட்டி ஆடும் ஆட்டம். இசைக்கருவிகள் தோன்றுவதற்கு முன்பே உருவான தொன்மையான கலை. கைகளைத் தட்டும் ஓசை மட்டுமே இசையாக பயன்படுத்தப்படுகிறது.

Kummi

கோலாட்டம் - இசை மற்றும் தாளத்திற்கு ஏற்ப வண்ண கோல்களைக் கொண்டு தட்டி ஆடப்படும் ஆட்டம். ஆடுபவர்கள் கையில் இரண்டு கோல்களை வைத்துக்கொண்டு ஒன்றுடன் ஒன்று மோதி ஒலி எழுப்பி ஆடுவார்கள்.

Kolattam | Image credit: wikipedia

ஒயிலாட்டம் - இதில் ஆண்கள் கம்பீரமான தாளங்களுக்கு ஏற்ப, கையில் ஒரே நிறத்திலான துணியைக் கொண்டு, ஒரே நிறத்திலான தலைக்கட்டுடன் ஆடுவார்கள். ஒயிலான சாயலுடன் ஆடப்படுகின்ற ஆட்டம் இது.

oyilattam

பொய்க்கால் குதிரை - மரக்காலில் நின்று கொண்டு, துணியால் செய்யப்பட்ட குதிரைக் கூட்டை சுமந்து, குதிரை சவாரி செய்வதுபோல் பாசாங்கு செய்து ஆடப்படும் சிறந்த நாட்டுப்புற கலையாகும்.

Poikkal Kuthirai | image credit: pinterest

தெருக்கூத்து - தெருக்களில் நாடகமாக நடத்தப்படும் கலை வடிவம் இது. இது இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழையும் ஒருங்கிணைக்கிறது. இரவு நேரத்தில் பொது இடங்களில் மேடை அமைத்து நடத்தப்படுகிறது.

Therukoothu

மயிலாட்டம் - மயிலின் அசைவுகளைப் பின்பற்றி ஆடப்படும் ஒரு நாட்டுப்புற நடன வடிவமாகும். இதில் கலைஞர்கள் மயிலின் தோகையுடைய உடைகளை அணிந்து ஆடுவார்கள். சிலர் மயில் உருவ பொம்மையில் தங்கள் உருவத்தை மறைத்துக் கொண்டு ஆடுவர்.

Mayilattam | Imagecredit: sreesakthicultural.com

காவடியாட்டம் - இது முருகப்பெருமானை வழிபடும்போது, காவடி எனப்படும் சுமைகளைத் தோளில் வைத்துக் கொண்டு பக்தர்கள் ஆடும் ஒரு பாரம்பரியமான பக்தி நிறைந்த நடனமாகும்.

Kavadi Attam

வில்லுப்பாட்டு - வில் என்ற இசைக்கருவியை கோலால் அடித்து ஒலி எழுப்பி, பாடல்களையும், உரையாடல்களையும் நிகழ்த்தி கதைகளைக் கூறும் ஒரு கிராமிய இசைக் கலை. இது தென்தமிழ் நாட்டின் நாட்டுப்புற கலை வடிவங்களில் ஒன்றாகும்.

Villu Paatu

புலியாட்டம் - புலியின் கம்பீரமான அசைவுகளை பிரதிபலிக்கும் நாட்டுப்புற நடனமாகும். பெரும்பாலும் ஆண்களால் நிகழ்த்தப்படுகிறது. 6 கலைஞர்கள் வரை குழுவாக ஆடுவார்கள். சக்தி வாய்ந்த மற்றும் துள்ளலான அசைவுகளை வெளிப்படுத்துவார்கள்.

Puliyattam
10 drinks you must try
வெறும் வயிறு... வெல்லும் ஆரோக்கியம்! கட்டாயம் ட்ரை பண்ண வேண்டிய 10 பானங்கள்!