நான்சி மலர்
வெதுவெதுப்பான நீரில் எழுமிச்சைப்பழ சாறு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
இரவு 1 தேக்கரண்டி ஜீரகத்தை தண்ணீரில் ஊற வைத்து காலையில் காய்ச்சி வெறும் வயிற்றில் குடித்தால், வாயுவை குறைக்கும், கொழுப்பை கரையும்.
இரவு 1 தேக்கரண்டி வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், குடல் ஆரோக்கியம் மேம்படும்.
கற்றாழைச் சாறு காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வது, சரும ஆரோக்கியத்தையும், பொலிவையும் தருகிறது.
இரவில் திரிபலா பொடியை வெந்நீரில் கலந்து வைத்து காலையில் குடிப்பது, மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
இஞ்சியை வெந்நீரில் காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள வீக்கம் குறையும்.
வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் ஒரு சிட்டிகை சேர்த்து குடிப்பதால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
துளசி இலையை நீரில் காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால், சுவாசப் பாதை கோளாறுகள் குணமாகும்.
காலையில் வெறும் வயிற்றில் சோம்பு நீரை குடிப்பது வாய் துர்நாற்றத்தைப் போக்கி புத்துணர்ச்சியை அளிக்கிறது.