உலகில் 500 வகைத் தொப்பிகள் இருக்கா? அதுல 10 பார்ப்போமா?

தேனி மு.சுப்பிரமணி

Conical Hat: கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் தோன்றிய இது வைக்கோல், மூங்கில் மற்றும் பனை ஓலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இத்தொப்பி வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பை வழங்கும் அகலமான விளிம்புடன் உள்ளது.

Conical Hat | Imge credit: Pinterest

Baseball Cap: பல விளையாட்டு அணிகள் பேஸ்பால் தொப்பியைத் தங்கள் விருப்பமான தொப்பியாகத் தேர்வு செய்கின்றன. மேலும், இத்தொப்பிகளை விளையாட்டுப் போட்டிகளில் ஆதரவாளர்கள் பெருமையுடன் அணிவதற்காக, நிறுவனங்கள் தங்கள் இலச்சினை மற்றும் முத்திரைகளைப் பதித்து விலையின்றி வழங்குகின்றனர்.

Baseball cap | Imge credit: Pinterest

Beret: பிரான்சில் மிகவும் பிரபலமாக அணியப்படும் பெரட், இன்று மக்களிடையே ஒரு நாகரீகமான ஆடையாக மாறியுள்ளது. பல ஆண்டுகளாக விவசாயிகள் அணிந்திருந்த இத்தத் தொப்பி, தங்களுடைய உயர்நிலையை வெளிப்படுத்தும் தொப்பிகளாக மாற்றம் பெற்று பயன்படுத்துவதாக இருக்கிறது.

Beret | Imge credit: Pinterest

Bucket Hat: ஒரு காலத்தில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் வெயிலில், தங்கள் தலையில் வெப்பம் தாக்காமல் இருக்க வாளி தொப்பி அணிந்திருந்தனர். இன்று இந்தத் தொப்பிகள், நவநாகரீகத் தோற்றத்தைக் காட்ட ஆண்களும் பெண்களும் அணியும் தொப்பிகளாக மாறி இருக்கின்றன.

Bucket Hat | Imge credit: Pinterest

Cowboy Hat: மேற்கத்தியத் திரைப்பட ரசிகர்கள் யாரும் இந்த வகையான தொப்பிகளைப் பார்த்து ரசித்திருப்பார்கள். அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் உள்ள ஆண்களும் பெண்களும் இவ்வகைத் தொப்பிகளை அணிந்து சுற்றித் திரிய விரும்புகிறார்கள்.

Cowboy Hat | Imge credit: Pinterest

Fedora: உலகின் மிகவும் முன்னணித் தொப்பிகளில் ஒன்றாக கருதப்படும் இது, அதன் உருளை வடிவத்தால் எளிதில் அடையாளம் காணும் வகையிலும் இருக்கிறது.

Fedora | Imge credit: Pinterest

Fez: தொப்பிகளில் கவர்ச்சியானதாகக் கருதப்படும் இத்தொப்பி, அதன் உருளை வடிவம் மற்றும் மேலே தொங்கும் பெரிய குஞ்சம் ஆகியவற்றால் எளிதில் அடையாளம் காணும் வகையிலும் இருக்கிறது.

Fez | Imge credit: Pinterest

Sun Hat: இன்றையப் பெண்கள் வெயிலில் அணியும் மிகவும் பொதுவான தொப்பிகளில் ஒன்று. சூரியத் தொப்பி பெருமையுடன் ஒரு அகன்ற விளிம்பைக் காட்டுகிறது. இது அணிபவரின் முழுத் தலையையும் சூரியனின் எதிர்மறை விளைவுகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

Sun hat | Imge credit: Pinterest

Top Hat: பண்டையக் காலங்களில் உலகின் நாகரிக மனிதர்களால் அணியப்பட்ட மற்றொரு உன்னதமான தொப்பி. இது ஒரு அகலமான விளிம்பு மற்றும் உயரமான கிரீடம் கொண்டது. வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ஆபிரகாம் லிங்கன் போன்றவர்கள் இவ்வகைத் தொப்பிகளை அணிந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கின்றனர்.

Top Hat | Imge credit: Pinterest

Straw Hats: வைக்கோல் தொப்பிகள் என்பது பல நூற்றாண்டுகளாக பிரபலமாக இருக்கும் ஒரு வகை தலைக்கவசமாகும். இவ்வகைத் தொப்பிகள் பொதுவாக வைக்கோல் அல்லது பிற இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. மேலும், சூரிய ஒளியிலிருந்து நிழலை வழங்கும் அவற்றின் அகலமான விளிம்புகளுக்கு பெயர் பெற்றவை.

Straw Hats | Imge credit: Pinterest

காந்தி தொப்பி: இந்தியாவில், காந்தி தொப்பி எனும் ஒரு தொப்பி பயன்பாட்டிலிருந்து வருகிறது. இதனை, காந்தி குல்லாய் என்றும் சொல்கின்றனர். இது, கதர் (காதி) துணியால் செய்யப்பட்ட முன்புறமும் பின்புறமும் குறுகி நடுவில் விரிந்திருக்கும் ஒரு வகையான தொப்பியாகும்.

Gandhi Cap | Imge credit: Pinterest
Buddha | Imge credit: Pinterest
மன அமைதிக்கு புத்தர் கூறிய 10 உபதேச பொன்மொழிகள்..!