செ.ஹரிஷ்
ஒரு சில நேரங்களில் புத்தரின் போதனைகளான பொன்பொழிகளை படிக்கும் போதும், கேட்கும்போது நமக்குள்ளே ஓர் அளப்பரிய ஒரு மன அமைதியும் சாந்தமும் நிலவுகிறது. வாழ்வின் மன அமைதிக்காக புத்தர் போதித்த போதனைகளில் 10 உபதேச பொன்மொழிகளை இக்கட்டுரையில் காண்போம்.
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
இந்த உலகம் ஒரு மாயை, இதை உணர்ந்து செயல்படு, உன் செயல்களின் மீது நீயே பொறுப்பேற்றுக் கொள், நீயே உனக்கு ஒளி கொடு.
கோபத்தை கோபத்தால் வெல்ல முடியாது, அன்பால் மட்டுமே வெல்ல முடியும்.
உனது செயல்கள் மற்றும் எண்ணங்களில் கவனமாக இரு, ஏனெனில் அவை உன் வாழ்க்கையை உருவாக்குகின்றன.
துன்பத்திற்கான காரணம் அறியாமல் துன்பப்படுவதை விட, காரணத்தை அறிந்து அதை கடந்து செல்வது நல்லது. ஏனென்றால் மன அமைதியை வெளியே தேட வேண்டியது இல்லை.. அது உனக்குள் தான் இருக்கிறது.
எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்து, வெறுப்பை விலக்கு.
சகிப்புத்தன்மை மற்றும் மன்னிக்கும் குணம் ஆகியவற்றை கடைபிடி.
தியானத்தின் மூலம் மனதை அமைதிப்படுத்து, ஒழுக்கப்படுத்து, நடப்பது எல்லாம் நன்மைக்காகவே.
நிகழ்காலத்தில் வாழ், கடந்த காலத்தை நினைத்து வருந்தாதே, எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாதே.
நீ அன்பாய் இருக்கிறதை விட, அன்போடு சேர்ந்த உண்மையாய் இருக்கிறாய் என்பதே முக்கியம் ஏனென்றால் அதுதான் அதிக மகிழ்ச்சி தரக்கூடியது..!