​உங்கள் கையில் கட்டினால் எல்லோருடைய பார்வையும் உங்கள் மீதுதான்! அப்படி ஒரு அசத்தல் வாட்ச் டிசைன்கள்!

நான்சி மலர்

1. Minimalist stylish watches:
மிகவும் சிம்பிளான டயல் (Dial), மெல்லிய கேஸ் மற்றும் தேவையற்ற டிசைன்கள் இல்லாத இந்த வாட்ச்கள் அலுவலக பயன்பாட்டிற்கும், மாடர்ன் ஆடைகளுக்கும் மிகச் சிறந்த தேர்வாக உள்ளன.

Stylish watches | AI image

2. சதுர வடிவ டயல் (Square & Rectangular Faces): வட்ட வடிவ வாட்ச்களைத் தாண்டி, தற்போது செவ்வக மற்றும் சதுர வடிவ முகப்பு கொண்ட வாட்ச்கள் ஃபேஷன் உலகத்தில் அதிக அளவில் வருகின்றன.

Stylish watches | AI image

3. காக்டெய்ல் & ஜூவல்லரி வாட்ச்கள் (Cocktail & Jewelry Watches): நகைகளைப் போல கையில் நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட சிறிய வகை வாட்ச்கள். விசேஷங்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு உடுத்தும் பாரம்பரிய மற்றும் மாடர்ன் உடைகளுக்கு இது பொருத்தமாக இருக்கும்.

Stylish watches | AI image

4. இன்டக்ரேட்டட் பிரேஸ்லெட் வாட்ச்கள்: வாட்சின் டயலும் அதன் ஸ்டிராப்பும் (Strap) தனித்தனியாகத் தெரியாமல், ஒரே வடிவமைப்பில் ஒன்றிணைந்து flowing style-ல் இருக்கும் நவீன வாட்ச் ஸ்டைல் இது. இது கைகளுக்கு ஒரு ரிச் லுக் தரும்.

Stylish watches | AI image

5. கலர்ஃபுல் டயல் வாட்ச்கள்: கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களுக்கு குட் பை சொல்லிவிட்டு, தற்போது எமரால்டு பச்சை (Emerald Green), டீப் பர்கண்டி (Burgundy), மொக்கா மற்றும் சாஃப்ட் பிங்க் போன்ற வண்ணமயமான டயல் கொண்ட வாட்ச்கள் டிரெண்டிங்கில் உள்ளன.

Stylish watches | AI image

6. விண்டேஜ் ஹெரிடேஜ் ஸ்டைல்: பழைய கால பாணியை நியாபகப்படுத்தும் ரெட்ரோ லுக் வாட்ச்கள். பாரம்பரிய உடைகளுக்கும், எதார்த்தமான ஸ்டைலுக்கும் இது தனி அழகு சேர்க்கும்.

Stylish watches | AI image

7. செராமிக் வாட்ச்கள்: கீறல்கள் விழாத (Scratch-resistant) மிக மென்மையான மற்றும் நீடித்த உழைப்புத் திறன் கொண்ட கெராமிக் மெட்டீரியலால் ஆன வாட்ச்கள் பிரீமியம் லுக் விரும்புபவர்களால் அதிகம் விரும்பப்படுகின்றன.

Stylish watches | AI image

8. இன்டர்சேஞ்சபிள் ஸ்டிராப் வாட்ச்கள் : ஒரே வாட்ச் தான், ஆனால் தேவைக்கேற்ப லெதர் (Leather), கேன்வாஸ் (Canvas) அல்லது மெட்டல் ஸ்டிராப்களை நாமே எளிதாக மாற்றிக் கொள்ளக்கூடிய வசதிகொண்ட வாட்ச் வகைகள்.

Stylish watches | AI image

9. ஸ்கெலிடன் டயல் வாட்ச்கள்: வாட்ச்சுக்குள் இருக்கும் மெக்கானிக்கல் சக்கரங்கள் மற்றும் இயக்கங்கள் (Internal movements) வெளியே தெரியும் வகையில் வெளிப்படையான டிசைன் கொண்ட வாட்ச்கள்.

Stylish watches | AI image

10. மிட்-சைஸ் & ஸ்லிம் வாட்ச்கள்: கைக்கு பெரிதாகத் தெரியும் பலத்த வாட்ச்கள் போய், தற்போது கையில் அழகாகப் பொருந்தக்கூடிய 36mm - 40mm அளவிலான மெல்லிய மற்றும் நேர்த்தியான வாட்ச் வடிவங்கள் ஃபேஷனில் முதலிடத்தில் உள்ளன.

Stylish watches | AI image
Light therapy beauty care | AI image
அட, இதுதான் ரகசியமா? முகத்தை பளபளப்பாக்க இளைய தலைமுறை பின்பற்றும் மேஜிக் தெரபி!