அட, இதுதான் ரகசியமா? முகத்தை பளபளப்பாக்க இளைய தலைமுறை பின்பற்றும் மேஜிக் தெரபி!

நான்சி மலர்

Light therapy beauty care:

1. முகத்தில் எளிதில் அணியக்கூடிய எல்.இ.டி முகமூடிகள் (LED Face Masks) மூலம் வீடுகளிலேயே இந்தச் சிகிச்சையை எளிதாகச் செய்து கொள்ளலாம்.

Light therapy beauty care | AI image

2. சருமத்தின் வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ப நீலம், சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் போன்ற பல்வேறு வண்ண ஒளிக்கதிர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Light therapy beauty care | AI image

3. சிவப்பு ஒளி (Red Light): கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி, சுருக்கங்களைக் குறைத்து, சருமத்தை இளமையாகவும் இறுக்கமாகவும் வைத்திருக்கப் பயன்படுகிறது.

Light therapy beauty care | AI image

4. நீல ஒளி (Blue Light): முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களைக் குறிவைத்து அழித்து, தற்போதைய பருக்களையும் எதிர்காலத் தொல்லையையும் தடுக்கிறது.

Light therapy beauty care | AI image

5. மஞ்சள் ஒளி (Yellow Light): சென்சிடிவ் சருமத்திற்குப் பயன்படுத்தி, சிவந்துபோதல் (Redness), எரிச்சல் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

Light therapy beauty care | AI image

6. பச்சை ஒளி (Green Light): கரும்புள்ளிகள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் எனப்படும் நிறமாறுபாடுகளைச் சரிசெய்து, சரும நிறத்தை ஒரு சீராக மாற்றப் பயன்படுகிறது.

Light therapy beauty care | AI image

7. முகமூடிகள் தவிர, சிறிய வாண்ட்ஸ் (Wands) மற்றும் ரோலர்கள் மூலமாகவும் குறிப்பிட்ட பகுதிகளில் ஒளியைச் செலுத்தலாம்.

Light therapy beauty care | AI image

8. தெரபி செய்வதற்கு முன்பு ஹைலூரோனிக் அமிலம் அல்லது வைட்டமின் சி சீரம்களைப் பூசுவதன் மூலம் அதன் பலன்கள் பலமடங்கு அதிகரிக்கிறது.

Light therapy beauty care | AI image

9. ஒரு முறைக்கு வெறும் 10 முதல் 20 நிமிடங்கள் வரை மட்டுமே இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

Light therapy beauty care | AI image

10. ரசாயனப் பயன்பாடோ அல்லது வலியோ இல்லாமல், அனைத்து வகையான சருமத்தினரும் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் நவீன அழகு முறையாக உள்ளது.

Light therapy beauty care | AI image
Trending lipstick shades | AI image
கேம்பஸ் க்வீன் ஆகணுமா? அப்போ இந்த 10 லிப்ஸ்டிக் ஷேட்ஸ் உங்க பர்ஸில் கண்டிப்பா இருக்கணும்!