நிஜமாகவே வேலை செய்யும் 10 வைரல் ஸ்கின்கேர் ஹேக்ஸ்!

கிரி கணபதி

இன்டர்நெட்டில் தினமும் புதுப்புது அழகுக்குறிப்புகள் வைரலாகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால், எல்லாமே வேலை செய்யுமா என்றால் நிச்சயம் இல்லை. பல ஹேக்ஸ் நேர விரயம் தான். அப்படி இல்லாமல், நிஜமாகவே நல்ல பலன் தரும் 10 பெஸ்ட் ஸ்கின்கேர் ஹேக்ஸ் இதோ.

viral skincare hacks

1. முதலில் ஆயில் கிளென்சர், பிறகு சாதாரண ஃபேஸ்வாஷ். மேக்கப், சன்ஸ்க்ரீன் மற்றும் முகத்தில் உள்ள அழுக்கை ஆழமாக நீக்க இதைவிடச் சிறந்த வழியில்லை.

viral skincare hacks

2. முகம் லேசான ஈரப்பதத்துடன் இருக்கும்போதே Hyaluronic Acid அல்லது மாய்சரைசர் தடவுங்கள். இது சருமத்தை பல மடங்கு நீரேற்றத்துடன் பளபளப்பாக மாற்றுவதை நீங்களே பார்க்கலாம்.

viral skincare hacks

3. காலையில் தூங்கி எழுந்ததும் முகம் வீங்கியது போல் சோர்வாக இருக்கிறதா? ஒரு ஐஸ் கட்டியை மெல்லிய துணியில் சுற்றி முகத்தில் மசாஜ் செய்யுங்கள். வீக்கம் குறைந்து முகம் ஃப்ரெஷ் ஆகிவிடும்.

viral skincare hacks

4. திடீரென முகப்பரு வந்துவிட்டதா? அதை கை வைத்து உடைக்காமல், நைட் பிம்பிள் பேட்சை ஒட்டிவிட்டுத் தூங்குங்கள். காலையில் பரு இருந்த இடம் தெரியாமல் அமுங்கிவிடும்.

viral skincare hacks

5. தினமும் எல்லா க்ரீம்களையும் முகத்தில் பூசாமல், முதல் நாள் எக்ஸ்ஃபோலியேஷன், இரண்டாம் நாள் ரெட்டினால், அடுத்த இரண்டு நாட்கள் வெறும் மாய்சரைசர் மட்டும் என மாற்றி மாற்றிச் செய்வது சருமத்திற்கு மிகவும் நல்லது.

viral skincare hacks

6. உங்கள் சருமம் ரொம்ப வறட்சியாக இருந்தால், இரவில் மாய்சரைசர் போட்ட பிறகு, அதன் மேல் கொஞ்சமாக வாசலின் தடவித் தூங்குங்கள். காலையில் முகம் குழந்தையை போல் சாஃப்ட்டாக இருக்கும்.

viral skincare hacks

7. காட்டன் உறை உங்கள் முகத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி சுருக்கங்களை ஏற்படுத்தும். பட்டு உறையைப் பயன்படுத்துவது உங்கள் முகத்திற்கும் முடிக்கும் மிகவும் நல்லது.

viral skincare hacks

8. நெற்றியில் சின்னச் சின்னதாகப் பொடுகுப் பருக்கள் இருந்தால், ஆன்டி-டான்ட்ரஃப் ஷாம்புவை முகத்தில் தடவி 2 நிமிடம் கழித்துக் கழுவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

viral skincare hacks

9. கண்களுக்குக் கீழ் உள்ள கருவளையம் மற்றும் சோர்வைக் குறைக்க, பயன்படுத்திய க்ரீன் டீ பேக்-களை ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று கண்களின் மேல் வைக்கலாம்.

viral skincare hacks

10. முகத்தின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், முகத்தை அழகாக வைத்திருக்கவும் Face Oil தடவி வாரத்திற்கு இருமுறை இந்த மசாஜ் செய்வது நிச்சயம் கைகொடுக்கும்.

viral skincare hacks

இந்த ஹேக்ஸ் எல்லாமே எளிமையானவை, ஆனால் சூப்பரான ரிசல்ட் தரக்கூடியவை.

viral skincare hacks
TN-Candidates
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் ஸ்டார் வேட்பாளர்கள்!