சி.ஆர்.ஹரிஹரன்
சீரகம், வெந்தயம், வால்மிளகு ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வர இளநரை மறையும் (natural beauty tips).
பப்பாளிப்பழத்தை அரைத்து முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளிகள் ஆகியவை மறையும்.
தேன் மற்றும் எலுமிச்சைச்சாறு கலந்த கலவையை உதட்டின்மீது தொடர்ந்து தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் உதட்டில் ஏற்படும் கருமை மறைந்து விடும்.
புளித்த மோரை முகத்தில் தடவி, மிதமான சுடுநீரில் முகம் கழுவ முகம் பொலிவு பெறும். இதைத் தொடர்ந்து இருபது நாட்கள் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களின் தாக்கத்தால் ஏற்படும் கருமை நிறம் விலகி விடும்.
ரோஜாப்பூ இதழ்களை அரைத்து அதோடு பால், பச்சைப்பயிறு மாவு, மற்றும் ரோஸ்வாட்டர் கலந்து முகம், மற்றும் கழுத்துப்பகுதிகளில் தடவி வர சருமம் பளபளப்பாகும்.
பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி, அதை கண்களை சுற்றி வைக்க, கண்களை சுற்றி ஏற்படும் கருவளையம் மறைந்து விடும்.
உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன், ரோஸ் வாட்டர், மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து உடம்பில் தடவி வர பலன் நிச்சயம்.
வெள்ளை முள்ளங்கிச்சாறுடன், இரண்டு கரண்டி தக்காளிச்சாறு சேர்த்து இருபது நிமிடம் கழித்து மிதமான சுடுநீரில் முகம் கழுவிவர வெப்பத்தால் சருமத்தில் உண்டாகும் தவிட்டு நிறப்புள்ளி மறையும்.
தேங்காய்ப்பாலை தலையில் அரை மணி நேரம் ஊறவைத்துக்குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படி முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும்.
ஆலிவ் ஆயிலுடன் சர்க்கரை கலந்து, உள்ளங்கைகளில் தேய்த்துக் கழுவிவர, உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.
இளநீரை முகத்தில் தொடர்ந்து ஆறுமாதகாலம் தடவிவர சின்னம் மையால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.