ஆண்களுக்கான அனைத்து கால நிலைகளுக்கும் ஏற்ற 14 T-shirt வகைகள்!

பாரதி

டீ ஷர்ட் ஒரு வசதியான மற்றும் எளிமையான ஆடை. முதலில் ஆண்கள் மட்டுமே அதனை உடுத்தி வந்தார்கள். ஆனால் அதனுடைய வசதி இப்போது அனைவரும் உடுத்திக்கொள்ள காரணமானது. அந்தவகையில் ஆண்களுக்கான டீ ஷர்ட் வகைகளைப் பார்ப்போம்.

14 types of t shirts for men | Img Credit: French crown

Polo T-shirt:

இந்த வகையான டீ ஷர்ட்டை கோல்ஃப் (Golf) விளையாடும்போது, நிறுவனத்திற்கு செல்லும்போது, அல்லது பயணத்திற்கும் பயன்படுத்தலாம். மேலும் பளிச் நிறத்தில் அணிந்தால் உங்கள் உடலை அழகாக எடுத்துக் காண்பிக்கும்.

Polo-T-shirt | Img credit: FASO

Half sleeve T-shirt:

இது வட்டமான கழுத்து மற்றும் குட்டை கை வடிவமைப்பில் இருக்கும். மேலும் ஜீன், ட்ரௌஸர், பேன்ட் ஆகிய அனைத்திற்கும் பயன்படுத்தலாம். வெயில் காலங்களில் இது மிகவும் பொருத்தமானது.

Half sleeve T-shirt | Img credit: Bushirt

V Neck T-shirt:

மற்ற டீ ஷர்ட்களை விட இந்த ஷர்ட் பல்துறைகளிலும் பயன்படுத்தலாம். அதேபோல் அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்றது. இந்த டீ ஷர்ட்டை உள்ளே அணிந்துக்கொண்டு வெளியே ஹுட்டீ, கோர்ட் ஆகியவையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இது ஒரு தனித்துவமான லுக்கைத் தரும்.

v neck t-shirt | Img Credit: Banana republic

Henley T-shirt:

இது சாதாரண டீ ஷர்ட்டையும் போலோ டீ ஷர்ட்டையும் கலந்த டீ ஷர்ட். இதற்கு கழுத்து வடிவமைப்பு இருக்காது. ஆனால் இந்த டீ ஷர்ட் பயன்படுத்தி பல வகையான அவுட் ஃபிட் தயார் செய்யலாம். இந்த டீ ஷர்ட் ஆண்டு முழுவதும் உழைக்கும் தன்முடையது.

Henley T-shirt | Img Credit: Jockey india

Hooded T-shirt:

இந்த ஹுட்டட் டீ ஷர்ட் இப்போது அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. ஆபிஸ் லுக்கிற்கு ஏற்றது. அதேபோல் வெயிலிலிருந்தும், குளிலிருந்தும் காப்பாற்றும்.

Hooded T-shirt | Img Credit: Teez

Striped T-shirt:

இது ஒவ்வொரு ஆணும் கட்டாயம் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு டீ ஷர்ட். ஏனெனில் இதன் அழகு ஒவ்வொருவரையும் தனித்தவமாக காண்பிக்கும். இதனை ஷார்ட்ஸ், பேன்ட் ஆகியவற்றிற்கும் பயன்படுத்தலாம். இது வளைந்த கழுத்து, V கழுத்து ஆகியவற்றில் கிடைக்கும்.

Striped T-shirt | Img Credit: Selected homme

Solid T-shirt:

ஒரு புதிய எளிமையான அவுட் ஃபிட்டை விரும்புபவர்கள் நிச்சயம் இந்த டீ ஷர்ட்டை தேர்ந்தெடுக்கலாம். இது அனைத்து கழுத்து அமைப்பிலும் , காலர் வைத்தும் கிடைக்கும். டிசைன் இல்லாத ப்ளைன் நிறத்தில் அணிவது சிறப்பாக இருக்கும்.

Solid T-shirt | Img credit: Bushirt

Colourful Tie-dye T-shirt:

தன்னை தனித்துவமாக காண்பிக்க விரும்பும் ஆண்கள் இந்த டீஷர்ட்டைப் பயன்படுத்தலாம். இது கடற்கரைக்கு செல்லும்போது அணிவதற்கு மிகவும் ஏற்றது. இந்த டீ ஷர்ட், பஜாமஸ், ஸ்னீக்கர்( Sneaker) மற்றும் சன் கிளாஸ் அணிந்தால் சூப்பரான அவுட்ஃபிட் தயார்.

Colourful Tie-dye T-shirt: | Img Credit: Limeroad

U neck T-shirt:

இந்த டீ ஷர்ட் கழுத்தை ஒட்டி இருப்பதால் உடம்பை முழுவதுமாக மறைத்துவிடும். பிளைன் நிறத்தில் அணிந்தால் உங்கள் உடல் வடிவமைப்பை கம்பீரமாக எடுத்துக் காண்பிக்கும்.

U neck T-shirt | Img Credit: T T bazaar

Thin Long sleeves T-shirt:

இதை அணியும்போது உடலில் எந்தவிதமான உணர்வும் தெரியாது. அந்த அளவிற்கு மெலிதாகவும் எளிதாகவும் இருக்கும். எவ்வளவு வெப்பமான பகுதிக்கு சென்றாலும் இந்த டீ ஷர்ட் அணிந்து சென்றால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில் இந்த துணியின் காட்டன் அனைத்தையும் உள்ளிழுத்து விடும்.Light weight summer sweatshirt

Thin Long sleeves T shirt: | Img Credit: New York Magazine

Light weight summer sweatshirt:

இந்த டீ ஷர்ட் மிகவும் கேஷ்வலாக இருக்கும். இது பார்ட்டி மற்றும் ஷாப்பிங்கிற்கு ஏற்ற டீ ஷர்ட்.

Light weight summer sweatshirt | Img Credit: Ajio

Graphic T-shirt:

இந்த வகையான டீ ஷர்ட்டின் மேல் எதாவது எமோஜி, வார்த்தைகள் அல்லது படங்கள் இருக்கும். நீல ஜீன்ஸ் அணிந்து இந்த வகையான டீ ஷர்ட் அணிந்தால் ஒரு கூல் லுக் கிடைக்கும்.

Graphic T-shirt | Img Credit: Puma

Sleeveless T-shirt:

இது அணியும்போது உங்களுடைய கை தசைகள் கம்பீரமாக தெரியும். இப்போது அனைவரும் இந்த டீ ஷர்ட்டை உடற்பயிற்சி செய்யும்போதும் ஜிம் செல்லும்போதும் பயன்படுத்துகிறார்கள். மேலும் கடற்கரைகளுக்கும் இந்த டீ ஷர்ட் அணிவது வழக்கம்.

Sleeveless T-shirt: | Img Credit: Myntra

Pocket T-shirt:

இந்த வகையான டீ ஷர்ட்டில் மார்பு இருக்கும் இடத்தில் ஒரு பாக்கெட் வைத்திருக்கும். இது வீட்டில் வசதியாக அணிவதற்கும் பஜாமாவிற்கும் ஏற்ற டீ ஷர்ட்.

Pocket T-shirt: | Img Credit: Indiamart
Best Batsmen and Bowlers of 2023 | Img Credit: Freepik