ஆர்.ஐஸ்வர்யா
1/15. பெல் ஸ்லீவ்ஸ் மணி போல இருக்கும். தோள் பட்டையிலிருந்து முழங்கை வரை ஒட்டியும், அங்கிருந்து மணிக்கட்டு வரை விரிந்தும் இருக்கும்.
2/15. பிஷப் ஸ்லீவ்ஸ் கொஞ்சம் ராயலான லுக் கொடுக்கும். கை முழுதும் தளர்வாக வந்து, மணிக்கட்டுப் பக்கத்தில் ஒரு பட்டையோடு (Cuff) முடியும்.
3/15. கேப் ஸ்லீவ்ஸ் குட்டியான கை டிசைன். தோள்பட்டையை மட்டும் ஒரு குடை போல லேசாக மூடியிருக்கும்.
4/15. பஃப் ஸ்லீவ்ஸ் தோள்பட்டையில் சுருக்கம் வைத்து உப்பலாக தைக்கப்படும். இது எப்போதுமே அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகாத ஒரு டிசைன்.
5/15. கையின் நுனியில் அல்லது கை முழுவதுமே அடுக்கடுக்கான சுருக்கங்கள் வைத்திருப்பதுதான் ரஃபிள் ஸ்லீவ்ஸ்.
6/15. பூவின் இதழ்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி இருப்பது போல இரண்டு துணிகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கித் தைக்கப்படுவதுதான் இந்த பெட்டல் ஸ்லீவ்ஸ் டிசைன்.
7/15. கிமோனோ ஸ்லீவ்ஸ் ஜப்பானியர்களின் கிமோனோ உடையில் இருந்து வந்த ஸ்டைல். இது தனி கையாக இல்லாமல் ஆடையின் உடலோடு சேர்ந்தே வரும். மிகவும் தளர்வாக இருப்பதால், கைகுட்டை போல நீளமாகத் தொங்கும்.
8/15. லேண்டர்ன் ஸ்லீவ்ஸ் பார்க்க ஒரு பழங்கால விளக்கு போல இருக்கும். கையின் மணிக்கட்டுக்குச் சற்று மேலே விரிந்து, பின் மணிக்கட்டில் சுருங்கும்.
9/15. பட்டர்ஃப்ளை ஸ்லீவ்ஸ் பார்ப்பதற்கு பட்டாம்பூச்சியின் சிறகுகளைப் போலவே அகலமாகவும், மென்மையாகவும் இருக்கும்.
10/15. 3/4 ஸ்லீவ்ஸ் முழங்கைக்கும் மணிக்கட்டுக்கும் இடையில் முடிவடையும் இந்த வகை கைகள், சவுகரியத்திற்கும் ஸ்டைலுக்கும் ஒரு மிகச்சிறந்த தேர்வு.
11/15. பிளட்டர் (Flutter) ஸ்லீவ்ஸ் தளர்வாகவும், நடக்கும்போது மென்மையாக அசையும் வகையிலும் இந்த கைகள் இருக்கும். இது உங்கள் ஆடைக்கு மென்மையான ரொமண்டிக் லுக் தரும்.
12/15. பலூன் ஸ்லீவ்ஸ் கையின் மணிக்கட்டுப் பகுதியில் அதிகப்படியான சுருக்கங்கள் வைத்து, ஒரு பலூன் போல உப்பலாக இருக்கும்.
13/15. பேட்விங் (Batwing) ஸ்லீவ்ஸ் வௌவாலின் இறக்கைகள் போல ஆடையின் உடல் பகுதியோடு இணைந்தே வரும் இந்த கைகள், அணிவதற்கு மிகவும் வசதியாக இருக்கும்.
14/15. லெக்-ஆஃப்-மட்டன் ஸ்லீவ்ஸ், தோள்பட்டையில் உப்பலாகவும், முழங்கையிலிருந்து மணிக்கட்டு வரை கச்சிதமாகவும் இருக்கும். இது விக்டோரியன் காலத்து ராணி போன்ற ஒரு கம்பீரமான அழகைத் தரும்.
15/15. ஜூலியட் ஸ்லீவ்ஸ் நீளமான மற்றும் கச்சிதமான கைகள் இவை. மணிக்கட்டுப் பகுதியில் அழகான வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். பட்டு அல்லது புரோக்கேட் துணிகளுக்கு இது மிகவும் எடுப்பாக இருக்கும்.