வேதா கோபாலன்
1/12. மேஷ ராசி: என்னதான் ஏழரைச் சனி என்றாலும் மன உறுதியுடன் சமாளிப்பீர்கள்.
2/12. ரிஷப ராசி: தமிழ் வருடத்தின் ஆரம்பத்தில் நிறைய சிரமங்கள் இருக்கும். அது மெல்ல மெல்ல மாறிச் சந்தோஷச்சூழலை அளிக்கப்போகிறது!
3/12. மிதுன ராசி: நன்மையும் லாபமும் சற்று நிதானப்போக்கில்தான் நிகழும். அதனால் என்ன? மொத்தத்தில் கலகல வருடம்.
4/12. கடக ராசி: இத்தனைக் காலம் இந்த ராசிக்கு குரு பகவான் ஒளிந்து விளையாடினார். இனி தன் பார்வைகளால் ஜாலங்கள் செய்யப்போகிறார்!
5/12.சிம்ம ராசி: ஆரோக்கிய விஷயத்தில் மட்டும் கவனமாய் இருந்துட்டீங்கன்னா போதும். மற்றபடி, ஜாலியாத்தான் இருப்பீங்க. நீங்களே பாருங்களேன்!
6/12. கன்னி ராசி: எந்த விஷயமாவது நிதானப்போக்கில் நடந்தால் அது நிச்சயம் வெற்றிகரமாக முடியப்போகிறது என்று நீங்கள் உறுதியாக நம்பலாம்.
7/12. துலாம் ராசி: இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் உங்களின் நேர்மையை. பொறுமைக்குப் பரிசு தராமலா போய்விடுவான்?
8/12. விருச்சிக ராசி: கோபத்தைக் குறைத்துத் தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. மற்றபடி நீங்கள் தங்கக்கட்டி!
9/12. தனுசு ராசி: இந்த ஆண்டு ராசிநாதன் குரு உச்சம்பெற்று உங்களை மிக உயர்த்தப்போகிறாரே. சூப்பர்ங்க.
10/12. மகர ராசி: கடந்த மூன்று ஆண்டுகளைவிடஅற்புத வருடமாக இந்தப் ‘பராபவ’ அமையும். கோபம் மட்டும் அடிக்கடி வந்து சிம்மாசனமிடாமல் இருந்தால் போதும்.
11/12. கும்ப ராசி: கஷ்டங்கள் விடிந்துவிடும். படிப்படியாக நிலைமை சரியாவதைக் கண்கூடாகக் காண்பீர்கள். சந்தோஷம்தானே?
12/12. மீன ராசி: முயற்சிகளை அதிகப்படுத்துவதோடு தடை தாமதங்களை எதிர்பார்த்துத் தயார் நிலையில் இருங்கள். வெல்வது உறுதி.