நான்சி மலர்
Facial massage tips:
1. விட்டமின் E நிறைந்த பாதாம் எண்ணெய் சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, கருவளையம் மற்றும் முகச் சுருக்கங்களைக் குறைக்க சிறந்த தேர்வு.
2. வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு தேங்காய் எண்ணெய் மிகச் சிறந்தது. சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.
3. ஜோஜோபா எண்ணெய் நமது சருமம் இயற்கையாகச் சுரக்கும் சீபம் (Sebum) எண்ணெயைப் போன்றே இருக்கும். எனவே இது எண்ணெய் பசையுள்ள சருமம் உட்பட அனைத்து சருமத்திற்கும் ஏற்றது.
4. சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும், கரும்புள்ளிகளைப் போக்கவும் குங்குமாதி தைலம் அல்லது விட்டமின் C சீரம் கொண்டு மசாஜ் செய்யலாம்.
5. கற்றாழை ஜெல், எண்ணெய் பசை மற்றும் முகப்பரு உள்ள சருமத்திற்கு ஏற்றது. சருமத்தைக் குளிர்ச்சியாக்கி, சுருக்கங்கள் வராமல் இறுக்கமாக வைத்திருக்க உதவும்.
6. பச்சை பால் அல்லது தயிரைக் கொண்டு மசாஜ் செய்வது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, மென்மையான பொலிவைத் தரும்.
7. குவா ஷா (Gua Sha) இதய வடிவில் இருக்கும் இந்த கல் கருவி, முகத்தில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகரித்து, தாடை எலும்புகளையும் முக அமைப்பையும் (Jawline) அழகாக வரையறுக்க உதவும்.
8. ஜேட் ரோலர் (Jade Roller) முகத்தில் உள்ள வீக்கம் மற்றும் கண்களுக்குக் கீழே உள்ள வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தினால் புத்துணர்ச்சி கிடைக்கும்.
9. ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் சுற்றி அல்லது ஐஸ் ரோலர் பயன்படுத்தி மசாஜ் செய்யும்போது சருமத் துளைகள் (Open Pores) சுருங்கி, சருமம் உடனடியாக இறுக்கமடைவதோடு பொலிவுறும்.
10. எந்தக் கருவியும் இல்லை என்றாலும், சுத்தமான கைகளின் ஆள்காட்டி மற்றும் நடுவிரல்களைப் பயன்படுத்தி மேல்நோக்கி மசாஜ் செய்வதே மிகவும் எளிய மற்றும் சக்திவாய்ந்த முறையாகும்.