அழகு சாதனப் பொருட்கள்: நீங்கள் அறியாத 10 சுவாரஸ்யமான உண்மைகள்!

கிரி கணபதி

இன்றைய காலகட்டத்தில் அழகு சாதனப் பொருட்கள் இல்லாமல் பலரது ஒரு நாள் கூட முழுமையடைவதில்லை. நாம் தினமும் முகம் கழுவும் Face wash முதல் உதட்டுக்குத் தீட்டும் லிப்ஸ்டிக் வரை அனைத்திலும் பல ரகசியங்கள் உள்ளன.

Beauty Products

1. நீங்கள் பயன்படுத்தும் லிப்ஸ்டிக், நெயில் பாலிஷில் உள்ள பளபளப்பான தன்மைக்கு, பல முன்னணி நிறுவனங்கள் மீன் செதில்களில் இருந்து எடுக்கப்படும் Pearl essence என்ற பொருளைப் பயன்படுத்துகின்றன.

Beauty Products

2. நெயில் பாலிஷ் கண்டுபிடிப்பு மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தது அல்ல. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில்தான் இது முதலில் பயன்படுத்தப்பட்டது. அப்போது தேன் மெழுகு, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் ஜெலட்டின் ஆகியவற்றை கலந்து நகங்களுக்கு வண்ணம் தீட்டினர்.

Beauty Products

3. நாம் முகத்திலும் உடலிலும் பூசும் மேக்கப் பொருட்களில் சுமார் 60 சதவீதத்தை நமது சருமம் அப்படியே உறிஞ்சி ரத்த ஓட்டத்தில் கலக்கச் செய்கிறது. எனவே இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

Beauty Products

4. ஒரு பெண் தனது வாழ்நாளில் சராசரியாக 2 முதல் 3 கிலோ வரையிலான லிப்ஸ்டிக்கை அறியாமலேயே விழுங்கி விடுகிறாள் என்று ஆய்வுகள் கூறுகின்றன!

Beauty Products

5. பலரும் பெர்ஃபியூமை மணிக்கட்டில் ஸ்ப்ரே செய்து விட்டு தேய்த்துக்கொள்வார்கள். இப்படித் தேய்ப்பதால் பெர்ஃபியூமில் உள்ள மூலக்கூறுகள் உடைந்து, அதன் உண்மையான வாசனை சீக்கிரமே மறைந்துவிடும். ஸ்ப்ரே செய்த பின் அப்படியே விட்டுவிடுவதுதான் சரியான முறை.

Beauty Products

6. கண்களை அழகாக்கும் முதல் மஸ்காரா 19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. பெட்ரோலியம் ஜெல்லியையும், நிலக்கரித் தூளையும் கலந்துதான் அன்றைய காலத்தில் மஸ்காராவைத் தயாரித்தார்கள்.

Beauty Products

7. அழகு சாதனப் பொருட்களுக்கும் காலாவதி தேதி உண்டு. பல பொருட்களின் பின்புறம் திறக்கப்பட்ட டப்பாவின் படத்துடன் 6M, 12M என குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது, 6 மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.

Beauty Products

8. சுருக்கங்களைத் தடுக்கும் விலை உயர்ந்த Anti-aging கிரீம்களை விட, தினமும் நாம் பயன்படுத்தும் Sunscreen தான் சரும வயதாவதை மிகச் சிறப்பாகத் தடுக்கும் சக்தி வாய்ந்தது என சரும நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Beauty Products

9. இரவில் மேக்கப்பைக் கலைக்காமல் அப்படியே தூங்குவது உங்கள் சருமத்திற்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய துரோகம். ஒரு நாள் இரவு மேக்கப்புடன் தூங்கினால், உங்கள் சருமம் 7 நாட்கள் வரை விரைவாக முதுமையடையும் அபாயம் உள்ளதாம்.

Beauty Products

10. இரண்டாம் உலகப்போரின் போது, பெண்களின் மன உறுதியையும் நம்பிக்கையையும் அதிகரிக்க சிவப்பு நிற லிப்ஸ்டிக் ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டது.

Beauty Products

இனி நீங்கள் மேக்கப் போடும்போது இந்த சுவாரஸ்யமான உண்மைகள் நிச்சயம் உங்கள் நினைவுக்கு வரும்.

Beauty Products
aanmee
'சொர்க்கப் பிரதட்சணம்' என்றால் என்ன? உங்களை வியப்பில் ஆழ்த்தும் அரிய ஆன்மீக உண்மைகள்!