ஜூட் (Jute) ஆடைகளின் சிறப்புகளும், அவற்றை அணிவதால் உண்டாகும் பயன்களும்!

ஆர்.ஐஸ்வர்யா

ஜூட் எனப்படுவது தமிழில் சணல் என்று அழைக்கப்படுகிறது. இது இயற்கையான இழைகளால் ஆனது. கார்கோரஸ் தாவரங்களிலிருந்து சணல் பெறப்படுவதனால் தனித்துவமான பண்புகளை கொண்டுள்ளது.

Jute

வழக்கமான பருத்தியுடன் ஒப்பிடும்போது சணலுக்கு குறைவான பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. முதன்மையாக சாக்குகள் மற்றும் கயிறுகள் தயாரிக்க பயன்படுகின்றன.

Jute

அதன் கரடு முரடான அமைப்பு, எளிதாக கிடைக்கும் தன்மை மற்றும் மக்கும் தன்மை ஆகியவற்றால் சிறப்பு பெறுகிறது. உற்பத்தியின் போது சணல் ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.

Jute

ஒவ்வொரு ஹெக்டேர் சணல் பயிர்களும் தோராயமாக 15 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி 11 டன் ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.

Jute

சணல் ஆடைகளை அணிவதன் பயன்கள்:

Jute

நிலைத்தன்மை: சணல் தாவரங்கள் நிலையான பயிர் வகை ஆகும். அவை வளர குறைந்தபட்ச நீர் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள் தேவைப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கு மிகவும் நன்மை பயக்கும் இவற்றின் சாகுபடி சுற்றுச்சூழலுக்கு அவ்வளவாக கேடுகளை  உண்டாக்குவதில்லை.

Jute

எல்லாக் கால நிலைகளுக்கும் ஏற்றது: சணல் துணிகளை அணியும்போது அது காற்று உள்ளே போய் வரும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால் அணிவதற்கு வசதியாக இருக்கிறது. இது வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் உடலை சூடாகவும் வைக்க உதவுகிறது. அதனால் பல்வேறு கால நிலைகளில் சணல் ஆடைகளை அணிவது மிகவும் ஏற்றதாக இருக்கிறது.

Jute Dress

வியர்வையை உறிஞ்சும் தன்மை: சணல் இழைகள் ஈரப்பதத்தை உறிஞ்சும் பண்புகளை கொண்டுள்ளன. நமது தோலில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி சருமத்தை உலர்வாகவும், வசதியாகவும் வைத்திருக்க உதவுகிறது. உடல் வியர்த்தாலும் அவற்றை விரைவில் வெளியேற்றி விடும்.

Jute Dress | Imge Credit: Redbubble

புற ஊதா எதிர்ப்பு: சணல் ஆடைகள் புற ஊதாக்கதிர்களுக்கு இயற்கையான எதிர்ப்பைக் கொண்டுள்ளது. வெயில் காலத்தில் சணல் ஆடைகளை அணிந்து வெளியே செல்லும்போது சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் சருமத்தை தாக்கினாலும் சணல் ஆடைகள் உடலுக்கு பாதுகாப்பு கவசமாக விளங்கி புற ஊதாக் கதிர்களில் இருந்து ஏற்படும் பாதிப்பிலிருந்து விலக்கு அளிக்கிறது.

Jute Dress | Imge Credit: Sewport

ஒவ்வாமைக்கு விலக்கு: இது ஹைபோ அலர்கெனிக் உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு ஏற்றது. பிற செயற்கைத் துணிகள்  உடலுக்கு ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும். சணல் ஆடைகள் உடலுக்கு எந்தவித அலர்ஜியையும் ஏற்படுத்துவது இல்லை.

Jute Dress | Imge credit: thesecret label

ஆண்ட்டி மைக்ரோபியல் பண்புகள்: சணல் இயற்கையான நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது. நீண்ட நேரம் அணிந்திருந்தாலும் புத்துணர்ச்சியுடன் ஒருவரை வைத்திருக்கும். பிற ஆடைகளை அணியும்போது ஏற்படும் வியர்வைக் கசகசப்பும் கெட்ட வாடையும் இதில் வருவதில்லை.

Jute Dress | Imge Credit: Etsy

ஆயுள்: சணல் ஆடைகள் நீடித்து உழைக்கும் தன்மை வாய்ந்தவை‌. எளிதில் தேய்மானமோ அல்லது கிழிந்தோ போகாது. வழக்கமான பிற ஆடைகளை விட நீண்ட காலம் நீடித்து உழைக்கும். அதனால் அடிக்கடி புதிய உடைகளை வாங்குவதன் தேவையை குறைக்கிறது.

Jute Dress | Imge Credit: Etsy

மக்கும் தன்மை: சணல் இழைகள் முழுமையாக மக்கும் தன்மை கொண்டவை. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் காலப்போக்கில் இயற்கையாகவே மண்ணில் கலந்து விடுகின்றன. இவற்றால் எந்தவித பாதிப்பும் பூமிக்கு ஏற்படாது என்பதை இதன் சிறப்புக்களில் முக்கியமானது.

Jute Dress | Imge Credit: meesho
Bill Gates | Imge Credit: Pinterest
பில்கேட்ஸ் உதிர்த்த 10 உத்வேக மேற்கோள்கள்!