காது குத்துவதற்கு முன் நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

கிரி கணபதி

நீங்கள் புதிதாகக் காது குத்தத் திட்டமிட்டிருந்தால், பாதுகாப்பான மற்றும் வலியில்லாத அனுபவத்தைப் பெற இந்த 10 முக்கியக் குறிப்புகளைப் படியுங்கள்.

Ear Piercing

1. கடைவீதிகளில் உள்ள சாதாரண கடைகளில் Piercing gun மூலம் காது குத்துவதைத் தவிர்க்கவும். இதனால் திசுக்கள் கடுமையாகப் பாதிக்கப்படலாம்.

Ear Piercing

2. புதிதாகக் காது குத்தும்போது, நிக்கல் போன்ற ஒவ்வாமை ஏற்படுத்தும் உலோகங்களைத் தவிர்க்கவும். Implant-grade Titanium, 14k தங்கம் அல்லது Surgical Steel ஆகியவையே பாதுகாப்பானவை.

Ear Piercing

3. காதின் எந்தப் பகுதியில் குத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து குணமடையும் காலம் மாறுபடும். காது மடலில் குத்தினால் 6 முதல் 8 வாரங்களில் குணமாகிவிடும். ஆனால், காதின் மேல் பகுதியில் உள்ள குருத்தெலும்பில் குத்தினால் முழுமையாகக் குணமாக 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை கூட ஆகலாம்.

Ear Piercing

4. காது மடலில் குத்துவது எறும்பு கடிப்பது போன்ற சிறிய வலியை மட்டுமே தரும். ஆனால், காதின் கடினமான பகுதியான Helix, Tragus போன்ற இடங்களில் துளையிடும்போது வலி சற்று அதிகமாகவே இருக்கும்.

Ear Piercing

5. காது குத்திய பிறகு, அனிச்சை செயலாக நமது கைகள் அடிக்கடி அந்த இடத்திற்குச் செல்லும். ஆனால், கழுவாத கைகளால் புதிய காயத்தைத் தொடுவது பாக்டீரியா தொற்றை ஏற்படுத்தும்.

Ear Piercing

6. முன்பெல்லாம் காது குத்திய பின் தோடுகளை அடிக்கடி திருகி விடச் சொல்வார்கள். ஆனால், தற்போதைய மருத்துவ நிபுணர்கள் அதைப் பரிந்துரைப்பதில்லை. அப்படிச் சுழற்றும்போது, புதிதாக உருவாகும் மென்மையான செல்கள் கிழிந்து மீண்டும் காயம் பெரிதாகலாம்.

Ear Piercing

7. காது குத்திய பகுதியைத் தினமும் இரண்டு முறை Saline solution அல்லது மருத்துவர் பரிந்துரைத்த கிளென்சர் கொண்டு மென்மையாகச் சுத்தம் செய்ய வேண்டும்.

Ear Piercing

8. காது குத்திய பிறகு காயம் முழுமையாகக் குணமடையும் வரை நீச்சல் குளங்கள், ஏரிகள் மற்றும் கடலில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்கள் எளிதில் தொற்றை ஏற்படுத்திவிடும்.

Ear Piercing

9. காது குத்திய பக்கத்தில் அழுத்தம் கொடுத்துத் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். இது வீக்கத்தையும் வலியையும் அதிகரிக்கும்.

Ear Piercing

10. லேசான சிவத்தல், வீக்கம் முதல் சில நாட்களுக்குச் சாதாரணமானதுதான். ஆனால் தொடர்ச்சியான கடுமையான வலி, மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் சீழ் வடிதல், அதிகப்படியான வீக்கம், காய்ச்சல் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.

Ear Piercing

பாதுகாப்பான முறையில் காது குத்தி, தகுந்த பராமரிப்பை வழங்கி, உங்கள் புதிய தோற்றத்தை முழுமையாக ரசியுங்கள்!

Ear Piercing
Women's Day
குடும்பத் தலைவி டூ சமூகத் தலைவி!